கிரிக்கெட் தொகுப்பாளராக பணியாற்றி கிரிக்கெட் வீரர்களையே புருஷனாக மடக்கிப்போட்ட 6 பிரபல தொகுப்பாளினிகள் !!

Cricket

கிரிக்கெட் போட்டி நன்றாக நடக்க வேண்டும் என்றால் அந்த போட்டியில் ரசிக்கும் அளவுக்கு பேசக்கூடிய வர்ணனையாளர்கள் அந்தப் போட்டியை சிறப்பாக தொகுத்து வழங்க தொகுப்பாளரும் இருக்க வேண்டும். அப்படி கிரிக்கெட் மூலம் காதல் ஏற்பட்டு கிரிக்கெட் தொகுப்பாளர்களை மணந்து கொண்ட கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்.

பென் கட்டிங் மற்றும் எரின் ஹோலந்து
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் வீரர் பெண் கட்டிங் 2016ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியில் கொடுத்த பங்களிப்பை யாரும் மறந்து விட முடியாது. கடைசியாக வந்து பேட்டிங்கில் அதிரடி காட்டிய பெண் கட்டிங் அதேபோல் பௌலிங்கிலிம் முக்கியமான விக்கெட்டை கைப்பற்றி கொடுத்தார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொகுப்பாளரும், மிஸ் வேர்ல்ட் ஆஸ்திரேலியா பட்டத்தை வென்ற மாடலுமான ஹோலந்தை காதலித்து கரம் பிடித்தார்.

ஸ்டூவர்ட் பின்னி மற்றும் மயாண்டி லேங்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பின்னி ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறந்த பந்துவீச்சை தன் வசம் வைத்துள்ளார். பங்களாதேஷிற்கு எதிரான ஒரு போட்டியில் 4.4 ஓவர்களில் வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரது பந்துவீச்சு தான் இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் தற்போது வரை இருந்து வருகிறது. இவர் கிரிக்கெட் தொகுப்பாளரான மாயன்டியை காதலித்து கரம் பிடித்தார். மாயாண்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர்கள் மிக அனுபவமும் திறமையும் வாய்ந்த தொகுப்பாளர் ஆவார்.

ஜஸ்பிரித் பும்ரா சஞ்சனா கணேசன்
ஜஸ்பிரித் பும்ரா ஒரு நடிகையை காதலித்து வருகிறார் என்ற வதந்தி பல காலமாக பரவி வந்தது. ஆனால் அதற்குப் பின்னர் அந்த நடிகையின் தாயார் இது எல்லாம் வதந்தி தான் என அதிரடியாக தெரிவித்தார். அதன் பின்னர் எந்த விதமான வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவவில்லை. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்து வரும் சஞ்சனா கணேசனை ஜஸ்பிரித் பும்ரா கடந்த 2021 மார்ச் மாதம் கரம்பிடித்தார். கரம் பிடித்தார். யாருக்கும் தெரியாமல் நடந்தேறிய இந்த காதல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

மார்டின் குப்டில் மற்றும் லாரா மெக்கோல்ட்ரிக்
நியூசிலாந்தைச் சேர்ந்த ஓபனிங் வீரரான மார்டின் குப்டில் ஐபிஎல் போட்டிகளிலும் பஞ்சாப் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடி உள்ளவர். இவர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலின் தொகுப்பாளரான லாரா மெக்கோல்ட்ரிக்கை காதலித்து கரம் பிடித்தார்.

ஷேன் வாட்சன் மற்றும் லீ பர்லாங்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ஷேன் வாட்சன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொகுப்பாளரான லீ பர்லாங்கை காதலித்து கரம் பிடித்துள்ளார். தற்பொழுது அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ள ஷேன் வொட்சன் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோர்னே மோர்க்கல் மற்றும் ராஸ் கெல்லி
தென்னாபிரிக்காவை சேர்ந்த மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் சென்னை அணிக்காக ஒரு தொடரில் மிக அதிகமான விக்கட்டுக்களையும் கைப்பற்றி அந்த ஆண்டிற்கான பர்ப்பிள் கேப்பையும் கைப்பற்றினார். இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ராஸ் கெல்லியை காதலித்து வந்தார். சேனல் 9 இல் நீண்ட காலம் தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர். அவரை காதலித்து அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டார் மோர்னே மோர்க்கல்.

Leave a Reply

Your email address will not be published.