இந்த பொழப்புக்கு…. படுமந்தமான பிட்சை தயார் செய்து இலங்கையை ஜெயித்த இந்தியா… உண்மையை கூறிய போட்டி மத்தியஸ்தர் ஸ்ரீநாத். ஐ.சி.சி அதிரடி

Cricket

இலங்கை அணி அண்மையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய நிலையில் இந்தியா – இலங்கை இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடந்த பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் பிட்ச் சராசரிக்கும் கீழ் தரம் கொண்ட பிட்ச் என்று போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் ரிப்போர்ட் கொடுத்துள்ளார். பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையேயான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுமே டிராவில் தான் முடிந்தன. 2 போட்டிகளிலும் முடிவு கிடைக்கவில்லை.

ராவல்பிண்டி மற்றும் கராச்சி ஆகிய 2 ஆடுகளங்களுமே பேட்டிங்கிற்குத்தான் சாதகமாக இருந்தன. பவுலர்களுக்கு கொஞ்சம் கூட ஒத்துழைப்பு இல்லை. 2 ஆடுகளங்களுமே படுமந்தமாக இருந்தன. ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட்டில் 5 நாள் ஆட்டம் முழுவதுமாக ஆடியும் மொத்தமாக வெறும் 14 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தன. இதையடுத்து ராவல்பிண்டி ஆடுகளத்திற்கு போட்டி நடுவரே சராசரிக்கும் கீழான பிட்ச் என்று ரிப்போர்ட் செய்தார்.

அப்படியே அதற்கு நேர்மாறாக இருந்தது பெங்களூரு பிட்ச். இந்தியா – இலங்கை இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டி இரண்டரை நாளில் முடிந்தது. பெங்களூரு சின்னசாமி ஆடுகளத்தில் பவுன்ஸ் கணிக்கமுடியாதபடி இருந்தது. அந்த ஆடுகளம் மோசமாக இருந்த நிலையில், அந்த ஆடுகளத்திற்கு, ராவல்பிண்டி ஆடுகளத்திற்கு கொடுக்கப்பட்டதை போலவே, சராசரிக்கும் கீழான ஆடுகளம் என்று போட்டி நடுவர் ரிப்போர்ட் கொடுத்துள்ளார்.

இந்தியா – இலங்கை இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் நடுவரான பெங்களூரு மண்ணின் மைந்தனான ஜவகல் ஸ்ரீநாத், பெங்களூரு பிட்ச் சராசரிக்கும் கீழான பிட்ச் என்று ரிப்போர்ட் செய்துள்ளார். இதனால் அந்த பிட்ச்சிற்கு ஒரு டீமெரிட் புள்ளியும் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.