மிக முக்கிய வீரரை இழக்கும் சி.எஸ்.கே.. சோகத்தில் டோனியும், ரசிகர்களும்

Cricket

2022ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், சி.எஸ்.கே அணியால் 14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக தீபக் சஹார் இந்தாண்டு தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. அண்மையில் நிறைவுக்குவந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3ஆவது இருபதுக்கு 20 சர்வதேச போட்டியின் போது தீபக் சஹாருக்கு வலது கால் தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. பின்னரான ஸ்கேன் பரிசோதனையில் தசைநார் கிழிந்து இருப்பது தெரியவந்தது.

தற்போது பெங்கள10ரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் தங்கி உபாதையிலிருந்து மீண்டுவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தீபக் சஹாருக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய நீண்ட நாட்களாகும் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். முதல் பாதி ஆட்டங்களை நிச்சயமாக தவறவிடும் சஹார், இறுதிக்கட்ட லீக் போட்டிகளில் இணைந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சஹாரின் காயத்தின் தற்போதைய நிலை குறித்த விபங்களைப் பெற்றுக் கொண்ட பிறகு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சி.எஸ்.கே அணி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஐ.பி.எல் மெகா ஏலத்தில் தீபக் சஹாரை 14 கோடி ரூபாய்க்கு சென்னை சுபர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 10 கோடிக்கு மேல் ஏலம் எடுத்த முதல் வீரர் தீபக் சஹார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published.