ஆர்.சி.பி அணியின் தலைவர்களின் சாதனைகளும், வேதனையும்.. டு பிளஸிஸ் என்ன தல டோனியே வந்தாலும், ஆர்.சி.பி-க்கு தகர டப்பா கூட கிடையாது

Cricket

கிரிக்கெட் ரசிகர்களின் நரம்பைச் சூடாக்கும் ஐ.பி.எல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ஆம் திகதி முதல் மே 29ஆம் திகதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. ஆர்.சி.பி அணிக்கு இதுவரை அணித்தலைவராக செயற்பட்டவர்கள் அனைவரும் மிகச் சிறந்த வீரர்கள். பல சாதனைகளைச் செய்தவர்கள். ஆனால், எவருமே சம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொடுக்கவில்லை. தென்னாபிரிக்காவை சேர்ந்த நட்சத்திர அனுபவ வீரர் பாப் டு பிளஸிஸ் அந்த அணியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுநாள் வரை டிராவிட், கோஹ்லி உள்ளிட்ட எத்தனையோ ஜாம்பவான்கள் தலைமை செய்த போதிலும் அந்த அணியால் இதுவரை ஒருமுறை கூட சம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை.

  1. ராகுல் ட்ராவிட் (2008)

பெங்கள10ரைவைச் சேர்ந்த ராகுல் ட்ராவிட் அணியின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். இருப்பினும் அந்த சீசனில் அவர் தலைமையில் 14 போட்டிகளில் பங்கேற்ற அந்த அணி வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றதால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.

  1. அனில் கும்ப்ளே (2009 – 2010)

அதன்பின் பெங்கள10ரைச் சேர்ந்த மற்றொரு ஜாம்பவான் அனில் கும்ப்ளேவை அந்த அணி நிர்வாகம் தலைவராக நியமித்தது. அவர் தலைமையில் அபாரமாக செயற்பட்ட அந்த அணி 2009இல் இறுதிப்போட்டி வரை சென்றாலும் சம்பியனாக முடியவில்லை. 2009, 2010 ஆகிய 2 வருடங்கள் செயல்பட்ட அனில் கும்ப்ளே தலைமையில் 35 போட்டிகளில் பங்கேற்ற ஆர்.சி.பி 19 வெற்றிகளை பதிவு செய்தது.

  1. கெவின் பீட்டர்சன் (2009)

2009 இல் இங்கிலாந்து நட்சத்திரம் கெவின் பீட்டர்சன் முதல் 6 போட்டிகளில் அணியின் தலைவராக செயற்பட்டார். அதில் அந்த அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்த நிலையில், இங்கிலாந்துக்காக அவர் விளையாட சென்றதன் காரணமாக அதன் பின் அனில் கும்ப்ளே தலைமை பொறுப்பை ஏற்றார்.

  1. டேனியல் வெட்டோரி (2011-2012)

நியூசிலாந்தின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி கடந்த 2011 மற்றும் 2012 ஆகிய 2 வருடங்கள் அணியின் தலைவராக செயற்பட்டார். முதல் வருடத்திலேயே அசத்திய அவர் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற போதிலும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது.

  1. விராட் கோஹ்லி (2013 – 2021)

விராட் கோஹ்லியிடம் கடந்த 2013ஆம் ஆண்டு தலைமை ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் அபாரமாக செயற்பட்ட அவர் கடந்த வருடம் வரை 140 போட்டிகளில் அந்த அணிக்காக தலைமை செய்து முழு மூச்சுடன் கோப்பையை வெல்ல போராடினார். தனி ஒருவனாக போராடிய போதிலும் அவரால் சம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்ற முடியவில்லை என்பது சோகமான செய்தியாகும்.

  1. ஷேன் வொட்சன் (2017)

கடந்த 2017ஆம் ஆண்டு விராட் கோஹ்லி தலைமை பொறுப்பு வகித்த நிலையில் காயம் அடைந்த காரணத்தால் 3 போட்டிகளுக்கு அவுஸ்திரேலியாவின் நட்சத்திர சகலதுறை வீரர் ஷேன் வொட்சன் தலைவராக செயற்பட்டார். அதில் அந்த அணி ஒரு போட்டியில் மட்டும் வென்றது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published.