இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த மிக்கி ஆர்த்தர் குறித்த பதவியில் இருந்து விலகிய நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையானது புதிய பயிற்றுவிப்பாளரை தேடி வலைவீசி வருகிறது. இந்நிலையில் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்க கிறிஸ் சில்வர்வூட் உடனான இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையில் இலங்கை கிரிக்கெட் சபை ஈடுபட்டுள்ளது. ஆஷஸ் டெஸ்ட் தொடரின் படுதோல்வியின் பிறகு அண்மையில் கிறிஸ் சில்வர்வூட் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்தப் பின்னணியிலேயே இலங்கை கிரிக்கெட் சபை கிறிஸ் சில்வர்வுட் உடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட மிக்கி ஆர்த்தர் கடந்த டிசம்பரில் தன்னுடைய பதவியிலிருந்து விலகிக் கொண்ட நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இலங்கை கிரிக்கெட் சபை இன்னும் ஒருவரை நிரந்தரமாக நியமிக்கவில்லை.
பல பயிற்றுவிப்பாளர்கள் உடனான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இறுதியாக சில்வர்வூட்டுடனான பேச்சுவார்த்தைகளை இலங்கை கிரிக்கெட் தரப்பு ஆரம்பித்துள்ளது. முன்னதாக, நவீட் நவாஸ் இலங்கையின் அடுத்த தலைமை பயிற்சியாளராக வரலாம் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்க கிறிஸ் சில்வர்வூட் உடனான இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையில் இலங்கை கிரிக்கெட் சபை ஈடுபட்டுள்ளது. ஆஷஸ் டெஸ்ட் தொடரின் படுதோல்வியின் பிறகு அண்மையில் கிறிஸ் சில்வர்வூட் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.