ஒரே ஒரு ஓவர் தான்.. இந்திய வீரரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை க்ளோஸ் !! இதற்கு காரணம் ஹார்டிக் பாண்ட்யா தான்

Cricket

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி ஒரு ஓவரால் முடிவுக்கு வந்த இந்திய வீரரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை. இந்திய அணியில் ஆல்ரவுண்டராக சேர்க்கப்பட்ட ஸ்டூவர்ட் பின்னி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். 2014 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 4 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஒருநாள் போட்டியில் இந்திய வீரரின் ஒருவரின் சிறந்த பந்துவீச்சாகவும் உள்ளது. 2016 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணி பங்கேற்றது.

அந்த தொடர் தான் அவருடைய கிரிக்கெட் கேரியரை மாற்றப்போகிறது என பின்னி நினைத்திருக்க வாய்ப்பில்லை. அதுவரை சிறப்பாக விளையாடிய ஸ்டுவர்ட் பின்னியின் ஒரே ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லூயிஸ் 5 சிக்சர்களை தொடர்ச்சியாக பறக்கவிட்டு அதிர்ச்சியைக் கொடுத்தார். ஒரு வைடு மற்றும் சிங்கிள் என அந்த ஒரே ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 32 ரன்கள் கிடைத்தது. அந்தப் போட்டியே இந்திய அணிக்காக அவர் விளையாடிய கடைசி சர்வதேச 20 ஓவர் போட்டியாக அமைந்தது.

இதனையடுத்து அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். ஸ்டூவர்ட் பின்னியின் இடத்தை ஹர்திக் பாண்டியா நிரப்பினார். ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு கிடைக்காததால் ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஸ்டுவர்ட் பின்னி. ஒருநாள் போட்டியில் 4 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஸ்டுவர்ட் பின்னி இருக்கும் நிலையில், 2வது இடத்தில் அனில் கும்பிளே உள்ளார். 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதுதான் 2014 ஆம் ஆண்டு வரை இந்திய பந்துவீச்சாளர் ஒருவரின் ஒருநாள் போட்டியின் சிறந்த பந்துவீச்சாக இருந்தது. பின்னி 95 முதல் தர போட்டிகளில் விளையாடி 4 ஆயிரத்து 796 ரன்கள் குவித்துள்ளதுடன், 148 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 100 லிஸ்ட் ஏ போட்டிகளில் 1788 ரன்கள் எடுத்திருப்பதுடன், 99 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

ஸ்டூவர்ட் பின்னி 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார். அதே ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். 2019 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார்.

Leave a Reply

Your email address will not be published.