‘ஒரு மகத்தான கேப்டனின் இடத்தை நிரப்ப வேண்டிய தேவை எனக்கு இருக்கு. தல கூட இருக்கும் போது எதுக்கும் பயமில்ல’ – சி.எஸ்.கே கேப்டன் ஜடேஜா

Cricket

4 முறை சம்பியன் பட்டம் வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக எம்.எஸ். டோனிக்கு பதிலாக சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னையின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றது பற்றிய ரவீந்திர ஜடேஜா முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். ‘புதிய கேப்டனாக பொறுப்பேற்பதில் மிகவும் மகிழ்ச்சி. அதேசமயம் எம்எஸ் தோனி போன்ற ஒரு மகத்தான கேப்டனின் இடத்தை நிரப்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அவர் சென்னை அணியில் ஒரு மிகப்பெரிய மரபை ஏற்படுத்தியுள்ளார்.

எனவே அவரின் இடத்தில் அவர் விட்டுச் சென்றுள்ள பணிகளை அவரைப்போலவே தொடர்வேன் என்று நம்புகிறேன். மேலும் தற்சமயம் நான் எதற்காகவும் கவலைப்பட போவதில்லை. ஏனெனில் எம்எஸ் தோனி என்னுடன் இருப்பதால் எனக்கு ஏதேனும் ஒரு உதவி தேவைப்பட்டால் உடனடியாக அவரிடம் சென்று கேட்பேன். இப்போதும் கூட அவர் என்னுடன் இங்கேதான் இருக்கிறார். எனவே இதைப் பற்றி நான் பெரிதாக கவலைப்படவில்லை. வாழ்த்து கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி’ என கூறினார்.

அவர் கூறுவது போல கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகினாலும் ஜடேஜாவின் கீழ் முதல் முறையாக சென்னை அணியில் தோனி ஒரு சாதாரண வீரராக விளையாட உள்ளார். எனவே களத்தில் தன்னுடன் விளையாட இருக்கும் அவரிடம் எந்த சூழ்நிலையில் உதவி தேவைப்பட்டாலும் உடனடியாக தயங்காமல் கேட்டு சென்னையின் வெற்றிக்கு பாடுபடுவேன் என ரவிந்திர ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 2017-ஆம் ஆண்டு இதே போல இந்தியாவின் கேப்டன் பதவியில் இருந்து விலகி விராட் கோலி தலைமையில் விளையாடிய எம்எஸ் தோனி அவருக்கு பல வருடங்களாக உதவியாக இருந்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். எனவே அதேபோல ஜடேஜாவுக்கும் அவர் உதவுவார் என்பதால் சென்னை ரசிகர்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.