அன்று அவங்க இடத்துல ஜெயிச்சாங்க.. இப்ப ஏலும்னா ஒரு மெட்ச் வின் பண்ணுங்கடா பாப்பம். இலங்கை வந்து கூட்டத்தோடு அசிங்கப்படவுள்ள ஆஸி. அணி. – முழு அட்டவணை உள்ளே

Cricket

ஆரோன் பிஞ்சி தலைமையிலான அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்காக, ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஜூன் – ஜூலையில் இலங்கை செல்வதனை கிரிக்கெட் அவுஸ்ரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி, மூன்று ரி-20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடவுள்ளன.

கொழும்பு, கண்டி மற்றும் காலி என மூன்று மைதானங்களில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. டெஸ்ட் போட்டிகள் இரண்டும் காலி மைதானத்தில் நடைபெறுகின்றது. ஜூன் 7ஆம் திகதி இத்தொடர் ஆரம்பமாகின்றது. முதலிரண்டு ரி-20 போட்டிகளும் கொழும்;பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறுகின்றது. மூன்றாவது ரி-20 போட்டி கண்டி- பல்லேகல மைதானத்தில் நடைபெறுகின்றது.

முதலிரண்டு ஒருநாள் போட்டிகள் கண்டி- பல்லேகல மைதானத்திலும், மீதமுள்ள மூன்று ஒருநாள் போட்டிகள், கொழும்;பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் நடைபெறுகின்றன. இலங்கை அணி அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு சொந்த மண்ணில் பதிலடி கொடுக்க காத்திருக்கிறது இலங்கை அணி.

Leave a Reply

Your email address will not be published.