நீங்க எல்லாரும் நெனக்கலாம் ஜடேஜாவுக்கு இது முதல் கேப்டன்ஷின்னு.. ஆனா ஜடேஜா எப்பயோ எத்தன டீமுக்கு கேப்டனா இருந்திருக்காரு தெரியுமா ?

Cricket

நடப்பு சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவர் பதவியை தோனி, ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார், இது தோனி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சிஎஸ்கே-வின் கேப்டனாக இருந்து தோனி 4 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார். மேலும் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் தோனி. 2020ம் ஆண்டு தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் தோனி அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகப் போகிறார் என்ற தகவல் வெளியானது, இருப்பினும் கடந்த இரண்டு சீசன்களில் தோனி விளையாடி வருகிறார். இந்த ஆண்டும் சிஎஸ்கே அணிக்காக தோனி ஒரு வீரராக விளையாட உள்ளார். சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சற்று ஆறுதலாக உள்ளனர். கடைசியாக ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக 28 அக்டோபர் 2007 அன்று ராஜ்கோட்டில் உள்ள மேற்கு ரயில்வே மைதானத்தில் வினூ மன்கட் U-19 போட்டியில் மும்பை U-19க்கு எதிராக சவுராஷ்டிரா U19 அணிக்கு தலைமை தாங்கினார்.

அதன் பிறகு பெரிதாக எந்த அணிக்கு தலைமை தாங்காத ஜடேஜா, தற்போது சி.எஸ்.கே அணிக்கு தலைமை தாங்க உள்ளார். தற்போது ஜடேஜாவிற்கு முன் இருக்கும் சவால் சி.எஸ்.கே போன்ற மிகவும் பெரிய அணியை வழிநடத்தி செல்வதே ஆகும். ஐபிஎல் ஏலத்தில் அணிக்கு வந்துள்ள புதிய வீரர்களுக்கு எவ்வாறு வாய்ப்பு கொடுப்பார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.