ஐ.பி.எல் வீரர்களின் சம்பளத்தை பகல் கொள்ளையடிக்கும் இந்திய அரசு.. வெளிநாட்டு வீரர்களின் நிலை மிகவும் பரிதாபம் !!

Cricket

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் மெகா ஏலம் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்றது. சில முன்னணி வீரர்கள் 10 கோடிக்கும் மேல் ஏலம் போய் அசத்தினார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சஹார், மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன் போன்றவர்கள் அதிக தொகைக்கு ஏலம் போனார்கள். அப்படி 10 கோடியில் ஏலம் போனாலும் அவர்களுக்கு முழு தொகையும் சென்று சேராதாம். நீங்க நம்பலைனாலும் இதுதான் நெசம். ஆம், வீரர்கள் வாங்கும் சம்பளத்துக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுகிறது. இது ஒருவகையான வரி விதிப்புதான். 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.

உதாரணத்துக்கு, 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் இந்திய வீரருக்கு, டிடிஎஸ் போக கைக்கு 9 கோடிதான் கிடைக்கும். இதே இரண்டு வருட காண்ட்ராக்ட் போடப்பட்டிருந்தால் 20 கோடியில் 18 கோடிதான் கைக்கு கிடைக்கும். இந்திய வீரர்களுக்காவது பரவாயில்லை. வெளிநாட்டு வீரர்களின் நிலைமை இன்னும் பரிதாபம். அவர்களுக்கு 20 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுகிறது. 10 கோடி வாங்கினால் கைக்கு 8 கோடிதான் கிடைக்கும். ஒருவேளை இரண்டு வருட காண்ட்ராக்ட் என்றால், 20 கோடியின் 16 கோடிதான் கைக்கு கிடைக்கும்.

வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வந்து இரண்டு மாதம் ஐபிஎலில் விளையாடினால், அது வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு பாதிப்புதான். இதனை ஈடுசெய்ய வெளிநாட்டு வீரர்களை எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கிறதோ, அதில் 20 சதவீதம் பணத்தை அந்தந்த கிரிக்கெட் வாரியத்திற்கு செலுத்திவிடும். இந்த பணம் ஐபிஎல் ரெவன்யூ பூல் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. 10 சதவீத டிடிஎஸ் மூலம் வெளிநாட்டு வீரர்கள் சுமார் 4 கோடி ரூபாய்வரை இழக்க வேண்டிய நிலை இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.