எந்த அணிக்குள்ளும் இல்லாத சண் டைக் கோழிகள் இந்திய அணியில் தான்.. இந்திய டீமுக்குள் நிகழ்ந்த மிகப்பெரிய சண் டைகள் !

Cricket

கிரிக்கெட் போட்டிகளின் போது சொந்த அணிக்குள்ளேயே சிறிது சண்டைகள் நடைபெறும். இந்திய கிரிக்கெட் வீரர்கள் போட்டிகளின் போது தங்கள் சக வீரர்களுடன் சண்டையிட்ட ஐந்து தருணங்களை பாப்போம்.

சுரேஷ் ரெய்னா – ரவீந்திர ஜடேஜா
2013ல் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முத்தரப்புத் தொடரில், எம்.எஸ். தோனி விளையாட முடியாத சூழலில், விராட் கோலியை கேப்டனாக செயல்பட்டார். முந்தைய இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த இளம் இந்திய அணிக்கு நிறைய அழுத்தம் இருந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரரின் கேட்சை ரெய்னா தவற விட, கோபமடைந்த ஜடேஜா ரெய்னாவை திட்டினார்.
இரு வீரர்களிடையே வெளிப்படையான மோ தல் இருந்தது. ஜடேஜா ரெய்னாவிடம், ‘இதனால்தான் நீங்கள் கேப்டன் இல்லை’ என்று சொன்னதாக கூறப்படுகிறது. பிறகு இரு வீரர்களும் பேசி பிரச்சனையை தீர்த்தனர்.

அம்பதி ராயுடு – ஹர்பஜன் சிங்
ஐபிஎல் 2016 போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகளுக்கு இடையில் இந்த நிகழ்வு நிகழ்ந்தது. இதில் அனுபவம் வாய்ந்த ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் சண் டையிட்டு கொண்டனர். புனே அணிக்காக பேட்டிங் செய்த சவுரப் திவாரி, பவுண்டரி நோக்கி பந்தை அ டிக்க, ராயுடு அதனை தடுக்க தவறவிட்டார். இதனால் இருவரும் நேரெதிராக சண் டையிட்டு கொண்டனர்.

விராட் கோலி – கவுதம் கம்பீர்
இந்த ச ண்டை இந்தியன் ப்ரீமியர் லீக் 2013 சீசனில் நடந்தது. ஆர்சிபி மற்றும் கேகேஆர் இடையேயான போட்டியின் நடுவில் விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. விராட் கோலி அவுட் ஆனதும், கம்பீரும் சக அணியினருடன் கூடி கொண்டாடினர். அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. பிறகு போட்டி முடிந்தவுடன் இருவரும் சமாதானத்துடன் சென்றனர்.

ஆஷிஷ் நெஹ்ரா – எம்.எஸ் தோனி
இந்த சம்பவம் 2005-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான 4வது ஒருநாள் போட்டியில் நடந்தது. 10 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஷாஹித் அப்ரிடியின், கேட்சை தோனி தவறவிட்டார். இதனால் கடுப்பான நெஹ்ரா தோனியை பார்த்து சில வார்த்தைகளை கூறினார். இதனால் மைதானத்தில் சில சலசலப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.