திரும்பி வந்துட்டேன்னு சொல்லு… வந்தார் சி.எஸ்.கே கட்டப்பா.. குத்தாட்டம் போடும் சி.எஸ்.கே ரசிகர்கள் !

Cricket

2022ஆம் ஆண்டுக்கான 15ஆவது ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் சனிக்கிழமை 26ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் புதிதாக இரு அணிகள் இணைந்து மொத்தமாக 10 அணிகள் பங்கேற்பதால் எந்த அணி சம்பியனாகும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலிக்கு ‘விசா’ கிடைப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக இந்தியா வருவதில் இழுபறி நீடித்தது. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள 34 வயது இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலிக்கு ‘விசா’ கிடைப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக இந்தியா வருவதில் இழுபறி நீடித்தது.

இந்த நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் ‘விசா’ கிடைத்தது. இதையடுத்து அவர் இந்தியாவுக்கு புறப்பட்டார். இங்கு 3 நாள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருடன் இணைவார். தாமதம் காரணமாக நாளை நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தை தவறவிடும் மொயீன் அலி வருகிற 31-ந் தேதி நடைபெறும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவார் என்று சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.