அப்புடி விளாடுவாரு, இப்புடி விளாடுவாருன்னு பெரிசா பீத்திக்கிட்டிங்க.. இப்போ டோட்டல் சீரோ ! சி.எஸ்.கே ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்த பிரபல வீரர்

Cricket

2022ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் ஐ.பி.எல் தொடர் வெற்றிகரமாக ஆரம்பமாகியுள்ளது. இந்த முறை 10 அணிகள் களத்தில் நிற்பதால் எந்த அணி சம்பியனாகும் என்ற எதிர்பார்ப்பு அதிக அதிகம் எழுந்துள்ளது. 2022 ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர் தாங்கள் முதலில் பந்து வீசுவதாக தேர்வு செய்தார். அதனைத் தொடர்ந்து சென்னை அணியில் உள்ள வீரர்கள் குறித்து பேசிய ஜடேஜா அறிமுக வீரராக டேவன் கான்வே விளையாடுவதாக அறிவித்தார். மேலும் ராஜஸ்தான் அணியில் இருந்து வாங்கப்பட்ட ஷிவம் துபே, மும்பை அணியில் இருந்து வாங்கப்பட்ட ஆடம் மில்னே, உள்ளூர் வீரர் துஷார் பாண்டே ஆகியோர் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோரது பார்ட்னர்ஷிப் மூலம் பலமான துவக்கத்தை தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே விக்கெட்டை இழந்து கெய்க்வாட் அதிர்ச்சி அளித்தார். ரன் ஏதும் எடுக்காமல் அவர் ஆட்டம் இழந்து வெளியேறிய நிலையில் நியூசிலாந்தை சேர்ந்த மற்றொரு தொடக்க வீரரான டேவான் கான்வே சிறப்பாக விளையாடுவார் என்று பேசப்பட்டது.

ஏனெனில் 30 வயதாகும் அவர் டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 139 ஸ்ட்ரைக் ரேட் உடன் 602 ரன்கள் குவித்து உள்ளதால் நிச்சயம் சிறப்பான துவக்கம் கொடுப்பார் என்று இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பேசப்பட்டது. ஆனால் இந்த முதல் போட்டியின் போது எட்டு பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். துவக்கத்திலிருந்தே பந்துகளை எதிர்கொள்ள சிரமப்பட்ட அவர் இறுதியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது அனைவரது மத்தியிலும் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது என்றே கூறலாம்.

Leave a Reply

Your email address will not be published.