CSK அணியை தனியாளாக தூக்கி நிறுத்திய தல டோனி… வயது வெறும் நம்பர் தான் என்பதை உணர்த்திவிட்டார்… இந்த ஒரு இன்னிங்ஸ் போதும்

Cricket

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியிருந்தாலும், அந்த அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி ஆடிய இன்னிங்ஸ் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

ஐ.பி.எல் 15ஆவது சீசன் நேற்று ஆரம்பமானது. முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பனியின் தாக்கம் கருதி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் வரிசை வீரர்கள் யாருமே பெரிய ஸ்கோர் அ டிக்கவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் 0 (4), டிவோன் கான்வே 3 (8) இருவரும் உமேஷ் யாதவ் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் 28 (21) உத்தப்பா ஸ்டெம்பிட் ஆகி நடையைக் கட்டினார். இதனால், அணிக்கு அழுத்தம் அதிகரித்த நிலையில், ராயுடு 15 (17) ரன் அவுட் ஆகி நடயைக் கட்டினார். அடுத்து ஷிவம் துபேவும் 3 (6) பெரிய ஸ்கோர் அ டிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா, மகேந்திரசிங் தோனி இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். சுழற்பந்துகள் அதிகளவில் பவுன்சர் ஆனதால், ஸ்பின்னர்களுக்கு எதிராக நிதானமாக விளையாட ஆரம்பித்தனர்.

இதனால், தோனி 25 பந்துகளில் 15 ரன்கள்தான் சேர்த்தார். இதனைத் தொடர்ந்து ஆண்ட்ரே ரஸல், ஷிவம் மாவி ஆகியோர் பந்துவீச வந்த நிலையில், அவர்களுக்கு எதிராக தோனி விஸ்பரூம் எடுத்து, 13 பந்துகளில் 35 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் ஸ்கோரும் 120 ரன்களை கடந்தது. இருவரும் ஆட்டமிழக்கவில்லை. தோனி 38 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 50 ரன்களும், ஜடேஜா 28 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published.