அந்த இளமை இன்னும் மாறல்ல… அதிக வயதாகியும் (40 ஆண்டுகள் 262 நாட்களில்) சச்சின், டிராவிட் சாதனையை ஊதித்தள்ளிய தல டோனி !!

Cricket

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி ஒன்றை பதிவு செய்தது. அதுவும் நடப்பு சம்பியனான சி.எஸ்.கே அணிக்கு எதிராக கொல்கத்தா அணி வெற்றியை பதிவு செய்தமை பாராட்டுக்குரியது.

இந்த போட்டியில் 7 -வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய டோனி, துவக்கத்தில் மிகவும் மந்தமாக ஆடினார். இருப்பினும் கடைசி கட்ட ஓவர்களில் டோனி அதிரடி காட்டி ரசிகர்களை மகிழ்வித்தார். இந்த போட்டியில் டோனி 38 பந்துகளில் 50 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்று நடந்த போட்டியில் அரைசதம் அ டித்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை டோனி (40 ஆண்டுகள் 262 நாட்கள் ) படைத்துள்ளார்.

இதற்கு முன் ஐபிஎல் போட்டிகளில் அதிக வயதில் அரைசதம் அ டித்த வீரர் என்ற பெருமையை ராகுல் டிராவிட் (40 ஆண்டுகள் 116 நாட்கள் ) தன் வசம் வைத்து இருந்தார். இந்த சாதனையை 2013ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக ராகுல் டிராவிட் படைத்து இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர் (39 ஆண்டுகள் 362 நாட்கள்) இருந்தார். இந்த சாதனையை 2013ல் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் படைத்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளில் ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சாதனைகளை டோனி முறியடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.