இனிமே ஐ.பி.எல் ஆட்டம் சும்மா மஜா தான்.. 2022 ஐ.பி.எல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகள் லிஸ்ட்

Cricket

2022 ஐ.பி.எல் இல் புதிய விதிமுறைகள்

சர்வதேச கிரிக்கெட்டில் எம்.சி.சி சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அந்த மாற்றங்களின் ஒரு பகுதியை ஐ.பி.எல் போட்டியிலும் அமுல்படுத்த பி.சி.சி.ஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய விதிமுறைகள் இதோ

கொரோனா காரணமாக 12 வீரர்களுக்குக் குறைவான வீரர்கள் மட்டுமே ஓர் அணியில் நல்ல உடற்தகுதியுடன் இருந்தால் (அவர்களில் 7 வீரர்கள் இந்தியர்கள்), அந்த ஆட்டம் ஒத்திவைக்கப்படும். இது சாத்தியமில்லை என்றால் ஐ.பி.எல் தொழில்நுட்பக் குழு ஆட்டம் குறித்த முடிவை எடுக்கும்.

ஒவ்வொரு அணிக்கும் இரு டி.ஆர்.எஸ் முறையீடு வழங்கப்படும். தற்போது ஒரு வாய்ப்பு தான் அளிக்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் எம்.சி.சி. அறிமுகம் செய்யவுள்ள விதிமுறை ஐ.பி.எல் இலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒரு வீரர் பிடியெடுப்பு கொடுத்து ஆட்டமிழக்கும்போது மறுமுனையில் இருந்த துடுப்பாட்ட வீரர் மறுபக்க க்ரிஸூக்குச் சென்றால் அவரால் அடுத்த பந்தை எதிர்கொள்ள முடியும். இந்த விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. இப்போது புதிய துடுப்பாட்ட வீரர் தான் அடுத்தபந்தை எதிர்கொள்ள வேண்டும். ஒருவேளை ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்தால் மட்டுமே மறுமுனையில் உள்ள வீரர் அடுத்த ஓவரின் ஆரம்பத்தில் முதல் பந்தை எதிர்கொள்ளலாம்.

நொக் அவுட் ஆட்டங்களில் சுப்பர் ஓவரை முடிக்க முடியாமல் போனால், லீக் சுற்றில் எந்த அணி முன்னிலை பெற்றதோ அந்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும்.

 

Leave a Reply

Your email address will not be published.