இந்த அ டி போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா.. தன்னை நிராகரித்தவர்களுக்கு ஒரே இன்னிங்ஸில் பதிலடி கொடுத்த ரஹானே.

Cricket

தன் மீது இருந்த அத்தனை விமர்சனங்களுக்கும் ஒரே இன்னிங்ஸில் முற்றுப்புள்ளி வைத்த அஜிங்கிய ரஹானே. ஐபிஎல் 15வது சீசனின் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 10.5 ஓவரில் 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது சிஎஸ்கே. அதன்பின்னர் ஜடேஜாவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து விக்கெட்டை விடாமல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர்.

டெத் ஓவர் வரை விக்கெட்டை இழக்காமல் ஆடிய நிலையில், கடைசி 2 ஓவர்களில் தோனி பவுண்டரிகளை விளாசினார். விண்டேஜ் தோனியாக மாறி கடைசி 2 ஓவரில் அ டி வெளுத்து வாங்கினார். 19வது ஓவரில் ஒரு பவுண்டரியும் சிக்ஸரும் விளாசிய தோனி, கடைசி ஓவரில் 2 பவுண்டரி அ டித்து 38 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இன்னிங்ஸை முடித்தார். 20 ஓவரில் 131 ரன்கள் அடித்த சிஎஸ்கே அணி, 132 ரன்கள்.

132 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 16 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான சீனியர் வீரர் அஜிங்க்யா ரஹானே, 44 ரன்கள் அடித்தார். நிதிஷ் ராணா 21 ரன்னில் ஆட்டமிழந்தார். நன்றாக ஆடிய சாம் பில்லிங்ஸ் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் இலக்கு எளிதானது என்பதால், 19வது ஓவரில் இலக்கை எட்டி கேகேஆர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published.