‘அ டிச்சு சொல்றன்.. டோனியை தவிர மற்ற ஒரு கேப்டன்களும் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.’ – சேவாக் பேட்டி

Cricket

ஐ.பி.எல் 15ஆவது சீசன் முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் வரிசை வீரர்கள் யாருமே பெரிய ஸ்கோர் அ டிக்கவில்லை. இறுதியில் 131 ஓட்டங்களை மட்டுமே சி.எஸ்.கே அணி பெற்றுக்கொண்டது. இதன்பின் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான ரஹானே 44 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

அடுத்தடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா (21), சாம் பில்லிங்ஸ் (25) மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் (20) ஆகியோரும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததன் மூலம், 18.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தநிலையில், கொல்கத்தா அணிக்கு எதிரான இந்த தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா, ஆடுகளத்தின் பணி படர்ந்தது போட்டியையே மொத்தமாக மாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ்.டோனி விலகியதைத் தொடர்ந்து, சென்னை அணி கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், எம்.எஸ்.டோனி குறித்து முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் அளித்த பேட்டி வருமாறு,

‘ஒரு பவுலர் ஆரம்ப ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தினால், அடுத்தடுத்து ஓவர்களை வழங்கி அப்போதே அந்த பவுலரை முழுமையாக தோனி பயன்படுத்திவிடுவார். ஆனால், மற்ற கேப்டன்கள் இவ்வாறு செய்ய மாட்டார்கள். தோனியின் இந்த அணுகுமுறைதான் அவரை சிறப்படையச் செய்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.