2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி நடப்பு சம்பியன் சென்னை அணியை வீழ்த்தியது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரில் விராட் கோலி துவக்க வீரராக களமிறங்கினால், அதிக ரன்கள் குவித்த வீரர்களில் அவரே முதலிடத்தில் இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
டோனியை போன்றே விராட் கோலியும் இந்த முறை கேப்டன் பதவியை துறந்துவிட்டு சாதரண வீரராக விளையாட உள்ளதால், இந்த தொடரில் விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். அதே போல் கடந்த தொடர்களில் துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி, இந்த முறை எந்த இடத்தில் களமிறங்குவார் என்ற விவாதமும் ஒரு புறம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், விராட் கோலி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி,
விராட் கோலி இந்த முறையும் துவக்க வீரராக களமிறங்கினால் அது பெங்களூர் அணிக்கு மிகப்பெரும் பலத்தை கொடுக்கும் என தெரிவித்துள்ளார். இது குறித்து ரவி சாஸ்திரி பேசுகையில்,’விராட் கோலி இந்த தொடரில் துவக்க வீரராக களமிறங்கினால், ஆரஞ்சு நிற தொப்பி அவரிடம் மட்டுமே இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. கோலி துவக்க வீரராக களமிறங்குவது பெங்களூர் அணியின் பேட்டிங் ஆர்டருக்கும் வலு சேர்க்கும்.
விராட் கோலி மூன்றாவது இடத்தில் களமிறங்கினாலும் பிரச்சனை இல்லை, அணியின் தேவைக்கு ஏற்ப களமிறங்குவதே சரியானதாக இருக்கும். இந்த முறை பெங்களூர் அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவனாதாக உள்ளது. புதிய கேப்டன் டூபிளசிஸ் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்க காத்துள்ளேன்’ என்று தெரிவித்தார்.