மறைந்த ஷேன் வோர்ன் இந்த கெட்ட பழக்கத்திற்கு மைதானத்தில் கூட எப்போதும் அடிமையாக இருந்தார் – சக வீரர் கிளார்க் பகீர் தகவல்

Cricket

அவுஸ்திரேலிய கிரிக்கெட் உலகின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் தாய்லாந்தில் உள்ள அவரது வீட்டில் திடீரென கால மானார். அவரது மறைவு கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 52 வயதான அவர், மாரடைப்பால் இறந்த து சக கிரிக்கெட் வீரர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. கிரிக்கெட் உலகில் ஜாம்பவானாக இருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை என்பது சர்ச் சைக்குரியதாகவே இருந்தது. தனிப்பட்ட ஒழுக்கத்தில் வார்னேவின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்துக்குள்ளான நிலையில், அதில் ஒன்றை பொதுவெளியில் பகிர்ந்துள்ளார் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க்.

ஷேன் வார்னேவுடன் நீண்ட நாள் ஆஸ்திரேலிய அணியில் விளையாடிய மைக்கேல் கிளார்க், வார்னே கிரிக்கெட் களத்துக்கு வந்தால் கூட ஒரு மோ சமான விஷயத்தை யாருக்கும் தெரியாமல் செய்து கொண்டே இருந்ததாக கூறியுள்ளார். புகை ப்பழக்கத்துக்கு அடி மையாக இருந்த ஷேன் வார்ன், கிரிக்கெட் விளையாட டிரெஸ்ஸிங் ரூமுக்கு வரும்போதுகூட அதனை செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். அவரது கிட் பேக்கிற்குள் குறைந்தது 5 அல்லது 6 சிகரெட் பாக்கெட்டுகளை வைத்திருப்பாராம்.

ஒருமுறை வீரர்களின் ஒழுக்கம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமில் சர்ச்சை எழுந்தபோது, சிக ரெட் பி டிக்க அனுமதிக்காவிட்டால் பயிற்சிக்கு வரமாட்டேன் என வார்னே பிடிவாதமாக கூறிவிட்டாராம். மைதானத்துக்கு வருவதற்கு முன்பு சிக ரெட் பிடிப்ப தை வழக்கமாக வைத்திருந்த அவர், மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக ஏதேனும் ஒரு இடத்தில் சிக ரெட் பாக்கெட்டுகளை ஒழித்து வைத்துவிடுவாராம். 

அதேநேரத்தில் மைதானத்துக்குள் வந்துவிட்டால், விளையாட்டில் முழு ஈடுபாடுடன் இருப்பார் எனத் தெரிவித்துள்ள கிளார்க், மைதானத்திலும், மைதானத்துக்கு வெளியேவும் வித்தியாசமான வார்னேவை பார்க்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.