இலங்கை தேர்வாளர்கள் முகத்தில் சாணி அ டித்த பானுக.. கிரிக்கெட் விளையாட தொப்பை முக்கியமில்லை, பேட்டில் சிக்ஸர் அ டிப்பது தான் முக்கியம். ஒட்டுமொத்த வெறித்தனத்தையும் வெளிக்காட்டிய பானுக

Cricket

இலங்கை தேர்வாளர்கள் முகத்தில் சாணி அ டித்த பானுக.. கிரிக்கெட் விளையாட தொப்பை முக்கியமில்லை, பேட்டில் சிக்ஸர் அ டிப்பது தான் முக்கியம். ஒட்டுமொத்த வெறித்தனத்தையும் வெளிக்காட்டிய பானுக

இலங்கை அணியின் பானுக ராஜபக்ஷ, ஆர்.சி.பி அணிக்கெதிரான போட்டியில் அதிரடி ஆட்டம் விளையாடி இலங்கை அணியில் தன்னை நிராகரித்தவர்களுக்கு செம்ம பதிலடி கொடுத்துள்ளார். ஆர்.சி.பி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் முதல் ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய பானுக ராஜபக்ஷவின் பங்கு மிக முக்கியமாக அமைந்திருந்தது. 2022 ஐ.பி.எல் தொடரின் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், பாப் டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மாயன்க் அகர்வால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக டூபிளசிஸ் 88 ரன்களும், விராட் கோலி 41 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 32 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் கேப்டன் மாயன்க் அகர்வால் 32 ரன்களும், ஷிகர் தவான் 43 ரன்களும் எடுத்து கொடுத்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய பனுகா ராஜபக்சே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 22 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதில் 4 சிக்ஸர்களும், இரு பவுண்டரிகளும் உள்ளடங்குகிறது. இறுதியில் 19வது ஓவரிலேயே இமாலய இலக்கை அசால்டாக எட்டிய பெங்களூர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published.