ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியில் ஓபனர்களாக அணித்தலைவர் டூ பிளஸி, மற்றும் முன்னாள் அணித்தலைவர் விராட் கோலி ஆகியோர் இருப்பார்கள் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சீசனில் கோலி ஓபனராகத்தான் இருந்தார். மேலும், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோதுகூட, ஆர்சிபி யில் ஓபனராகத்தான் இருப்பேன் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் டூ பிளஸியுடன் கோலி ஓபனராக இல்லாமல் இளம் வீரர் அனுஜ் ராவத் ஓபனராக களமிறங்கினார். இதனால், கோலிக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். காரணம், கடந்த இரண்டு சீசன்களிலும் ஓபனராக இருந்ததால், இம்முறையும் புது கேப்டன் டூ பிளஸி தனது இடத்தை மாற்ற மாட்டார் என்றுதான் கோலி நினைத்திருப்பார்.
ஆனால், அதிரடியாக முதல் போட்டியிலேயே கோலி ஓபனருக்கான இடத்திலிருந்து கீழ் இறக்கப்பட்டு, ஒன் டவுன் இடத்திற்கு சென்றுள்ளார். பீல்டிங் செய்தபோதும் கோலியுடன் டூ பிளஸி அவ்வளவாக ஆலோசனைகளை கேட்கவில்லை. குறிப்பாக, கடைசி கட்டத்தில், நெருக்கடியாக நேரத்திலும்கூட புது கேப்டன் டூ பிளஸி, சீனியர் வீரர், முன்னாள் கேப்டன் கோலியிடம் ஆலோசனை கேட்கவில்லை. தன்னுடைய திட்டத்தை மட்டுமே செயல்படுத்தி வந்தார். கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும், ஆலோசகராக இருந்து அணியை வழிநடத்துவார் என்றுதான் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
மேலும், கடைசி கட்டத்தில் டூ பிளஸி ஆலோசனை கேட்டிருந்தால், கோலி மறுத்திருக்க மாட்டார். தன்னுடைய அனுபவத்தை வைத்து சில திட்டங்களை கூறியிருப்பார். ஆனால், டூ பிளஸி அப்படி செயற்படவில்லை. இதனால், ஆர்.சி.பி அணி 20 ஓவர்களில் 205 ரன்கள் அ டித்தும், பயனற்றதாக மாறியது. ஆர்சிபி அணி முதல் போட்டியில் தோற்றதை அடுத்து, கோலியை அணியின் ஆலோசகராக நியமிக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.