‘ஜஸ்பிரிட் பும்ரா அப்படி என்ன செய்துவிடப்போகிறான்’ – பும்ராவை ஆர்.சி.பி அணியில் நிராகரித்த கோலி – பரபரப்பை கிளப்பிய பார்த்தீவ் பட்டேல்

Cricket

ஜஸ்பிரிட் பும்ராவை நிராகரித்த விராட் கோலி….

2022ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமானது. அன்றிலிருந்து இன்றுவரையில் ஒவ்வொரு போட்டிகளும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் முறையாக ஐ.பி.எல் தொடரில் 10 அணிகள் பங்கேற்பதால் இந்த முறை ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று மக்கள் ஏற்கனவே யூகிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்திவ் பட்டேல். இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு, மும்பை உள்ளிட்ட அணிகளுக்கு விளையாடியுள்ளார். 2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் பெங்களூரு அணிக்காக விளையாடினர். அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். ஆர்சிபி அணியில் ஜஸ்பிரித் பும்ரா முன்பே வாங்கப்பட்டிருப்பார் என்றும் கோலி தான் மறுத்துவிட்டார் என்றும் பார்த்தீவ் பட்டேல் ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய பார்திவ் பட்டேல் கூறுகையில, ‘நான் 2014ம் ஆண்டு ஆர்சிபியில் விளையாடிய போது, கோலியிடம் பேசினேன். பும்ரா என்ற ஒரு பவுலர் சிறப்பாக செயல்படுகிறார், அவரை எடுக்கலாமா என்று கேட்டேன். அதற்கு பதிலளித்த அப்போதைய கேப்டன் விராட் கோலி, என்ன பும்ரா, பும்ரா என கூறுகிறீர்கள். அவன் அப்படி என்ன செய்துவிடப்போகிறான்’ ‘ என கோலி தெரிவித்ததாக பார்திவ் பட்டேல் கூறியுள்ளார். பார்திவ் பட்டேலின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.