வீடியோ | ஆகாயத்தில் பறந்த பந்து.. பறவை போன்று பறந்து வந்து கேட்ச் பிடித்த சும்பன் கில்.. ஒரு நொடி மைதானமே அதிர்ந்து போனது. வாழ்த்துக்கள்

Cricket

Video on Below

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் இளம் வீரர் சுப்மான் கில் பிடித்த கேட்ச் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ் வென்று முதலில் பந்துவீசிய குஜராத் அணியில் முகமது ஷமி துல்லியமான பந்துவீசி ராகுல், குயின்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து ஆட்டத்தின் 3.3வது ஓவரில் வருண் ஆரூண் வீசிய பந்தை எவன் லீவிஸ் மிட் ஆஃப் திசையில் நோக்கி பெரிய ஷாட் ஆட முயன்றார். அப்போது பந்து ஆகாயத்தில் பறந்து சென்றது. அப்போது பவர் பிளே என்பதால் வீரர்கள் அனைவரும் உள் வட்டத்தில் தான் நின்றனர். இதனால் நிச்சயம் பவுண்டரி இல்லை சிக்சர் என ரசிகர்கள் நினைத்தனர்.

அப்போது இளம் வீரர் சுப்மான் கில், பந்தை கண்டதும் கபில் தேவ் 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ரிச்சர்ட்ஸ் விக்கெட்டை வீழ்த்த ஓடியது போல் பின்நோக்கி ஓடினார். பாயந்து பிடித்தார் ஆனால் பந்து அப்போதும் அவர் கைக்கு எட்டாது என்று உணர்ந்த சுப்மான் கில், அப்படியே பறவை போல் பறந்து கேட்ச் பிடித்தார். இதனை கண்டதும், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் ஓடி வந்து சுப்மான் கில்லை பாராட்டினர். சுப்மான் கில் அந்த கேட்சை விட்டுவிடுவார் என நினைத்த கிரிக்கெட் வர்ணனையாளர்களும் ஆச்சரியத்தில் உரைந்தனர்.

ஐபிஎல் தொடர் தொடங்கி 3 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் பேட்டிங், பந்துவீச்சு, ஃபில்டிங் என வீரர்கள் கலக்கி வருவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு காலத்தில் வெளிநாட்டு வீரர்கள் மட்டும் தான் இப்படி கேட்ச் பிடித்து அசத்துவார்கள். இந்திய வீரர்கள் கைக்கு வரும் கேட்சை கூட விட்டுவிடுவார்கள் என்ற கேலி கிண்டல் ஒரு காலத்தில் இருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published.