205 ரன் அ டிச்சும் தோற்றுப் போயிட்டிங்களேடா.. நான் இருந்திருந்தால்.. ஆர்.சி.பி அணியை பங்கமாய் கலாய்த்த சஹால் !!

Cricket

மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்.சி.பி 205 ரன்கள் அ டித்தும் தோல்வியை தழுவியது. இதனால் ஆர்சிபி அணியை ரசிகர்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர். கேப்டன்கள் மாறினாலும், முடிவுகள் மாறவில்லை என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

குறித்த போட்டியில் ஸ்பின் பவுலிங்கில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா 4 ஓவரில் 40 ரன்களும், ஆகாஷ் தீப் 3 ஓவரில் 38 ரன்களும் எடுத்தனர். ஷாபாஸ் அகமது ஒரு ஓவர் மட்டுமே வீசி 6 ரன்கள் மட்டும் எடுத்திருந்தார். இதனால் ஆர்சிபியின் சுழற்பந்துவீச்சு நேற்று சுத்தமாக எடுப்படவில்லை. முக்கிய வீரர் ஆர்சிபியில் எப்போதும் சாஹல் ரன்களை கட்டுப்படுத்தி, முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார். 2019ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக விளையாடிய சாஹல், 18 விக்கெட்டுகளையும், 2020ஆம் ஆண்டு சீசனில் சாஹல் 21 விக்கெட்டுகளையும், 2021ஆம் ஆண்டு சீசனில் 18 விக்கெட்டுகளையும் பெங்களூரு அணிக்காக சாஹல் வீழ்த்தினார்.

பெங்களூரு அணியின் முக்கிய வீரராக விளங்கிய சாஹலை, ஏலத்தில் அந்த அணி எடுக்கவும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போது தக்க வைக்கவும் இல்லை. தொடர்பு கொள்ளவில்லை இந்த நிலையில், ஆர்சிபி தோல்வி அடைந்த நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சாஹல் அளித்த பேட்டியில், ஐபிஎல் வீரர்கள் தக்கவைக்கப்படும் போது ஆர்சிபி அணி என்னை தொடர்பு கொள்ளவே இல்லை. ஆர்சிபி அணி என்னை மீண்டும் விளையாடுகிறீர்களா என்று கேட்டு இருந்தால், நிச்சயம் நான் வேறு அணிக்கு சென்று இருக்க மாட்டேன்.

என்னை ஏலத்தில் எடுப்பதாக கூறிவிட்டனர். ஆனால் அப்போதும் என்னை எடுக்கவில்லை. எனக்கு பணம் இரண்டாம்பட்சம் தான், ஆர்சிபி தான் எனக்கு மிகவும் பிடிக்கும். விராட் கோலி என்னுடைய கேப்டன், நல்ல மனிதர். இன்றும் எனக்கு எதாவது கிரிக்கெட்டில் அறிவுரை தேவைப்பட்டால் அவரிடம் தான் தொடர்பு கொண்டு பேசுவேன்.

Leave a Reply

Your email address will not be published.