தமிழ் பொண்ணு தமிழ் பொண்ணுதான்யா.. முகத்தில் மஞ்சள் பூசி, பட்டுச் சேலையில் கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லை திருமணம் முடிந்த வினி ராமன். – மகிழ்ச்சி பொங்கிய வீடியோ இதோ !

Cricket

கிரிக்கெட் உலகில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கிளன் மேக்ஸ்வெல்லும் இந்தியாவின் தமிழ்நாட்டை தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த வினி ராமனும் காதலித்து வந்தனர். இந்த காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. இவர்களது திருமணம் கிரிக்கெட் ரசிகர்கள் வட்டத்தில் வைரலாகப் பேசப்படுகிறது. வினி ராமன் குடும்பத்தினர் தங்களது மகளின் திருமணத்தையொட்டி வழக்கமாக தமிழ்நாட்டில் மஞ்சள் நிறத்தில் பத்திரிகை அ டிப்பார்களே அதுபோல அடித்து உறவினர்களிடம் விநியோகித்திருந்தனர்.

இந்த திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலானது. மார்ச் 27ம் தேதி திருமணம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக 18ம் தேதி இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. இதையடுத்து தான் மிஸஸ் மேக்ஸ்வெல் ஆகியுள்ளதாக வினி ராமன் டிவீட் போட்டிருந்தார். தற்போது இந்து முறைப்படி இருவரும் கணவன் மனைவி ஆகியுள்ளனர். திருமண நலுங்கு சம்பிரதாயம் நடந்து முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து அதுதொடர்பான புகைப்படங்களை வினிராமன் வெளியிட்டுள்ளார்.

திருமண வாரம் தொடங்கி விட்டதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நம்ம ஊர்ப் பொண்ணுங்க மாதிரி முகத்தில் மஞ்சள் பூசி, பட்டுச் சேலையில் படு உற்சாகமாக, மகிழ்ச்சியாக காட்சி அளிக்கிறார் வினி ராமன். அவருக்கு அருகில் மேக்ஸ்வெல் இந்திய மாப்பிள்ளைகள் அணிவது போன்ற ஆடையில் ஜம்மென்று இருக்கிறார். வினி ராமனின் தலையில் முத்தமிடுகிறார் மேக்ஸ்வெல். அதை கண்களை மூடி மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறார் வினி. இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

இந்த தம்பதிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அணி நிர்வாகம் போட்டுள்ள டிவீட்டில், சென்னை மாப்பிள்ளை ஆகி விட்டார் மேக்ஸி.. திருமண வாழ்த்துகள்.. உங்களது புதிய பார்ட்னர்ஷிப்பில் அதிக மேக்ஸிம்களை விளாச விசிலடிக்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.