ராகுலுக்கு பேட் பண்ணுவதை விட வேறு எதுவும் தெரியாது.. பழைய பகையோ தெரியல்ல. நட்சத்திர இலங்கை வீரரை வைத்துக்கொண்டு இப்படி யூஸ் பண்ணாம விட்டுட்டாரு

Cricket

ஹார்டிக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் அணி வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தும் அந்த அணியின் தலைவர் கே.எல் ராகுலின் மந்தமான கேப்டன்ஷி காரணமாக அந்த அணி தோல்வியை தழுவியது.

இலங்கை அணியின் முக்கிய வீரரான துஸ்மந்த சமீரவுக்கு இனனும் 1 ஓவர் பந்துவீச இருந்தும் அதனை கேப்டன் ராகுல் சரியாக பயன்படுத்தவில்லை என்பது தான் தற்போது கேப்டன் ராகுல் மீது எழுந்துள்ள விமர்சனங்களாகும். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் 159 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் மேத்யூ வேட் களமிறங்கினர். அதிரடி காட்ட முயற்சித்த கில் துஷ்மந்தா சமீரா வீசிய முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். தொடர்ந்து அடுத்த ஓவரின் முதல் பந்தில் சிறப்பான யார்க்கர் பந்து மூலம் விஜய் சங்கரை (4) போல்டாக்கினார் சமீரா.

10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ஓட்டங்கள் எடுத்து நல்ல நிலையை வந்தடைந்தது. இதன்பிறகு, கிருனால் பாண்டியா பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்ற ஹார்திக் பாண்டியா 33 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தீபக் ஹூடாவின் அடுத்த ஓவரிலேயே மேத்யூ வேடும் 30 ஓட்டங்களில் போல்டானார். இதன்பிறகு, சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் கேஎல் ராகுல். இதனால், 10 முதல் 15 ஓவர்கள் வரை குஜராத்தால் 19 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

இதன் காரணமாக கடைசி 5 ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 68 ஓட்டங்கள் தேவை என்ற இக்கட்டான நிலை இருந்தது. இந்த சூழலில் தான் கேப்டனாக ராகுல் சில தவறுகளை செய்தார். மீண்டும் சுழற்பந்துவீச்சாளரான ஹூடாவிடமே பந்தைக் கொடுக்க, இதனை நன்கு பயன்படுத்திக்கொண்ட ராகுல் திவாட்டியா அடுத்தடுத்து சிக்ஸரும், பவுண்டரியும் அ டித்தார். அதே ஓவரில் டேவிட் மில்லரும் தன் பங்குக்கு அடுத்தடுத்து 1 பவுண்டரியும், 1 சிக்ஸரையும் விளாசினார். சாதுரியமாக முடிவெடுத்திருக்கவேண்டிய இந்த நிலையில், மீண்டும் ரவி பிஷ்னாயிடமே பந்தைக் கொடுத்தார் ராகுல்.

இந்த ஓவரை சிக்ஸருடன் தொடங்கினார் திவாட்டியா கடைசி 2 பந்துகளையும் பவுண்டரிக்கு விளாசினார். இந்த ஓவரில் 17 ஓட்டங்கள் கிடைக்க கடைசி 3 ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 29 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டன. ஆவேஷ் கான் வீசிய 18-வது ஓவரில் மில்லரை சிக்ஸர் அடிக்க விட்டாலும், அடுத்த பந்திலேயே அவரை ஆட்டமிழக்கச் செய்தார். மில்லர் 21 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்தார். 19-வது ஓவரை வீசிய சமீரா முதல் பந்திலும், 5-வது பந்தில் பவுண்டரி கொடுத்தாலும் அந்த ஓவரில் மொத்தம் 9 ஓட்டங்கள் மட்டுமே குஜராத்தால் எடுக்க முடிந்தது.

கடைசி ஓவரில் 11 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஆவேஷ் கான் வீசிய முதலிரண்டு பந்துகளை சதரங்கபானி பவுண்டரிக்கு விளாச லக்னௌ தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி திவாட்டியா வெற்றியை உறுதி செய்தார். 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ஓட்டங்கள் எடுத்த குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published.