‘தயவு செய்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிடுங்கள்’ – ராகுல் செய்த தவறால் பறிபோகும் கேப்டன் பதவி

Cricket

2022 ஐ.பி.எல் தொடரின் 4ஆவது லீக் போட்டியில் லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் அணி வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தும் அந்த அணியின் தலைவர் கே.எல் ராகுலின் மந்தமான கேப்டன்ஷி காரணமாக அந்த அணி தோல்வியை தழுவியது. இலங்கை அணியின் முக்கிய வீரரான துஸ்மந்த சமீரவுக்கு இனனும் 1 ஓவர் பந்துவீச இருந்தும் அதனை கேப்டன் ராகுல் சரியாக பயன்படுத்தவில்லை என்பது தான் தற்போது கேப்டன் ராகுல் மீது எழுந்துள்ள விமர்சனங்களாகும்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ஓட்டங்கள் எடுத்தது. இலக்கை துரத்திய குஜராத் அணியிலும் ஓபனர் சுப்மன் கில் 0 (3) சமீரா வேகத்தில் டக் அவுட் ஆனார். அடுத்து விஜய் சங்கருக்கு மிரட்டலாக யார்க்கரை வீசி சமீரா வீழ்த்தினார். இதனால், அந்த அணி 78-4 என திணறியது. ஆட்டமும் லக்னோ அணி பக்கம் சாய்ந்தது.

இந்த சமயத்தில் தீபக் ஹூடாவுக்கு ராகுல் 2 ஓவர்களை வழங்கினார். இனியும் விக்கெட்டை விட்டுக்கொடுத்தால், தோற்றுவிடுவோம் என்ற எண்ணிய குஜராத் பேட்ஸ்மேன்கள் தீபக் ஹூடா பந்துகளில் பெரிய ஷாட்களை அ டிக்கவில்லை. இதனால், 12 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே கசிந்தது. இறுதியில் குஜராத் அணி 5 ஓவர்களில் 67 ரன்கள் அ டிக்க வேண்டும் என்ற நிலை உருவானது. முன்னணி பௌலர்கள் சமீரா, ஆவேஷ் கான், மோஷிஸ் கானுக்கு தலா இரண்டு ஓவர்கள் இருந்தன. இதனால், இவர்கள் ரன்களை கட்டுப்படுத்தி, வெற்றியைப் பெற்றுக் கொடுத்துவிடுவார்கள் என்றுதான் ரசிகர்கள் நினைத்தார்கள்.

அந்த நேரத்தில் 16ஆவது ஓவரை தீபக் ஹூடாவுக்கு ராகுல் வழங்கினார். கிடைத்த ஆப்பரை மிஸ் செய்துவிடக் கூடாது என்று எண்ணிய மில்லர், தேவத்தியா இருவரும் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசி 22 ரன்களை சேர்த்தனர். இந்த ஓவர் மூலம் கேப்டன் ராகுல் பாடம் கற்கவில்லை. அடுத்த ஓவரையும் மறுபடியும் ஸ்பின்னருக்கு கொடுத்தார். கண்ணா ரெண்டாவது லட்டு திண்ண ஆசையா என்பதுபோல, பிஷ்னாய் ஓவரில் தேவத்தியா ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகளை விளாசி, வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தினார்.

இந்த இரண்டு ஓவர்களில் மட்டும் 39 ரன்கள் கசிந்தது. இறுதியில் 18 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே அ டிக்க வேண்டும் என்ற நிலை வந்தது. ஆவேஷ் கான் இரண்டு ஓவர்களையும், சமீரா ஒரு ஓவரையும் வீசி முடிந்தவரை ரன்களை கட்டுப்படுத்த முயற்சித்தனர். இருப்பினும், தோல்விதான் கிடைத்தது. சமீராவுக்கு ஒரு ஓவர் கிடப்பில் இருந்த நிலையிலும், பார்ட் டைம் பௌலர் தீபக் ஹூடாவுக்கு ஒரு ஓவரை வழங்கி 22 ரன்களை கசியவிட்டதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இப்படி சொதப்பலாக கேப்டன்ஸி செய்த ராகுலுக்கு, ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இதேபோல் மீண்டும் தவறு செய்தால், தயவு செய்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிடுங்கள் என ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.