‘நாங்கள் பவுலிங்கை இன்னும் நன்கு பயிற்சி செய்ய உள்ளோம். நான் என்ன நினைத்தேனே அதை சரியாக செய்தேன்’ – விமர்சனங்களுக்கு ஒரே வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்த ராகுல்

Cricket

2022 ஐ.பி.எல் தொடரின் 4ஆவது லீக் போட்டியில் லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் அணி வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தும் அந்த அணியின் தலைவர் கே.எல் ராகுலின் மந்தமான கேப்டன்ஷி காரணமாக அந்த அணி தோல்வியை தழுவியது. இலங்கை அணியின் முக்கிய வீரரான துஸ்மந்த சமீரவுக்கு இனனும் 1 ஓவர் பந்துவீச இருந்தும் அதனை கேப்டன் ராகுல் சரியாக பயன்படுத்தவில்லை என்பது தான் தற்போது கேப்டன் ராகுல் மீது எழுந்துள்ள விமர்சனங்களாகும்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ஓட்டங்கள் எடுத்தது. இலக்கை துரத்திய குஜராத் அணியிலும் ஓபனர் சுப்மன் கில் 0 (3) சமீரா வேகத்தில் டக் அவுட் ஆனார். அடுத்து விஜய் சங்கருக்கு மிரட்டலாக யார்க்கரை வீசி சமீரா வீழ்த்தினார். இதனால், அந்த அணி 78-4 என திணறியது. ஆட்டமும் லக்னோ அணி பக்கம் சாய்ந்தது.

16 மற்றும் 17ஆவது ஓவர்களில் மட்டும் 39 ரன்கள் கசிந்தது. இறுதியில் 18 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே அ டிக்க வேண்டும் என்ற நிலை வந்தது. ஆவேஷ் கான் இரண்டு ஓவர்களையும், சமீரா ஒரு ஓவரையும் வீசி முடிந்தவரை ரன்களை கட்டுப்படுத்த முயற்சித்தனர். இருப்பினும், தோல்விதான் கிடைத்தது. சமீராவுக்கு ஒரு ஓவர் கிடப்பில் இருந்த நிலையிலும், பார்ட் டைம் பௌலர் தீபக் ஹூடாவுக்கு ஒரு ஓவரை வழங்கி 22 ரன்களை கசியவிட்டதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

போட்டி முடிந்த பிறகு பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில் ‘இந்த போட்டி மிகவும அருமையாக இருந்தது. பரவாயில்லை இந்த போட்டியின் போது மிடில் மற்றும் லோயர் ஆர்டரில் பேட்டிங் மிகவும் அருமையாக தான் இருந்தது. இந்த போட்டியில் எங்களுக்கு அதிக நம்பிகை எழுந்துள்ளது.’ எதிர் அணியில் இருக்கும் பவுலர்கள் மிகவும் திறமையான வீரர்கள். எங்களுக்கு நன்கு தெரியும் குஜராத் அணியில் இருக்கும் ஷமி மிகவும் திறமையான பவுலர் தான் என்று. அவரது பங்காரமான பவுலிங் வீசியதால் தான் எங்கள் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.’

‘அதனால் அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட நாங்கள் பவுலிங்கை இன்னும் நன்கு பயிற்சி செய்ய உள்ளோம். நாங்கள் என்ன நினைத்தோமோ அதனை சரியாக தான் செய்துள்ளோம். எங்கள் அணியின் (லக்னோ) குட்டி டிவில்லியர்ஸ் தான் படோனி. வரத்து முதல் போட்டியிலேயே அருமையாக விளையாடியுள்ளார் என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.

Leave a Reply

Your email address will not be published.