பழைய பன்னீர் செல்வமா திரும்பி வந்த டோனி.. பயிற்சியில் நாலா பறக்கும் சிக்சர் மழை.. மெர்சலான வீடியோவை வெளியானது !

Cricket

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாக இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் குறித்த ஐ.பி.எல் தொடருக்கு தயாராகும் வகையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சூரத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் பயிற்சியின் போது தல தோனியின் மெர்சலான பேட்டிங் வீடியோ ஒன்றை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது. இதனால் தோனி பழைய பன்னீர் செல்வமா திரும்பி வந்துட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பலத்திற்கு முக்கிய காரணமாக இருப்பவர் தோனி.

கடைசி சில ஓவர்களில் வந்து அதிரடியாக விளையாடி பல ஆட்டங்களில் தனி நபராக வெற்றியை தேடி தந்துள்ளார். குறிப்பாக ஸ்லொங் ஓவர் எனப்படும் 16-20 ஓவரில் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்ட்ரைக் ரேட் என 187 ஐ வைத்துள்ள வீரர் என்ற பெருமை தோனிக்கு சேரும். ஐபிஎல் செயல்பாடு அந்த இறுதி கட்டத்தில் மட்டும் தோனி 1265 பந்துகளை பிடித்து 2377 ரன்களை விளாசியுள்ளார். ஒட்டுமொத்தமாக தோனி ஐபிஎல் வரலாற்றில் 220 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 4746 ரன்களை அடித்துள்ளார்.

ஸ்ட்ரைக் ரேட் 135 ஆக வைத்துள்ளார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக தோனியின் பேட்டிங்கில் தொய்வு ஏற்பட்டு இருந்தது. இழந்த பார்ம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக தோனி பேட்டிங்கில் பெரிதாக சாதிக்கவில்லை. 2020ஆம் ஆண்டு 14 போட்டிகளில் விளையாடி 200 ரன்களும், 2021ஆம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடி 114 ரன்களும் மட்டுமே தோனி அடித்து இருந்தார். வெறும் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக மட்டுமே சிறப்பாக செயல்பட்டு தோனி அணியில் வெற்றிக்கு பங்காற்றினார்.

இதனையடுத்து தோனி, தனது பழைய பார்ம்க்கு திரும்பியுள்ளார். சூரத்தில் நடைபெறும் பயிற்சி ஆட்டங்களில் தோனி வான வேடிக்கை காட்டுகிறார். பழைய மாதிரி சிக்சர், பவுண்டரிகளை விளாசி, நல்ல உத்வேகத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனியின் மெர்சலான பேட்டிங் தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. இதனால் தோனி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.