இந்த பொழப்புக்கு…. ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் கணக்கை திருடி தன்னை கேப்டனாக அறிவித்த சஹால். இதை விட ஸ்பெஸஷலைட் ஒன்னு இருக்கு !!

Cricket

2022 ஐபிஎல் வரும் மார்ச் 26ஆம் திகதி தொடங்க உள்ளது. பல நாடுகளிலிருந்து அந்தந்த அணிகளைச் சேர்ந்த வீரர்கள் இந்தியாவிற்கு வந்து பயிற்சி ஏற்கனவே தொடங்கி விட்டனர். சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட அணிகளுக்கு நிகராக தற்போது ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற அணிகளும் மிகச் சிறந்த வீரர்களை தங்களது அணியில் எடுத்து வைத்து தொடருக்காக காத்திருக்கின்றனர். ஐபிஎல் தொடரின் ஆரம்ப காலத்தில் இருந்து ஆடி வரும் முக்கியமான அணியில் ஒன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

முதல் தொடரில் இந்த அணிக்கு சமீபத்தில் மறைந்த முன்னாள் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஷேன் வார்னே கேப்டனாக இருந்து கோப்பையை வென்று கொடுத்தார். ஜடேஜா, வாட்சன், யூசுப் பதான் போன்ற இளம் வீரர்களை வைத்துக்கொண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பை வென்றது அப்போது மிகவும் பெரிதாக போற்றப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஒரு முறை கூட ராஜஸ்தான் அணி கோப்பையை கைப்பற்ற வில்லை. தற்போது அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது ராஜஸ்தான் அணி.

Yuzvendra Chahal

கடந்த ஐபிஎல் தொடர் வரை பெங்களூரு அணியின் முக்கிய வீரராக இருந்த சஹால் தற்போது ராஜஸ்தான் அணிக்கு விளையாட உள்ளார். நகைச்சுவையான பேச்சுகளுக்கு சொந்தக்காரரான சஹால் தற்போது ராஜஸ்தான் அணியில் நுழைந்தவுடன் நகைச்சுவையாக ஒரு காரியத்தை செய்துள்ளார். ராஜஸ்தான் அணி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பாஸ்வேர்டை தான் சிஇஓ-விடம் இருந்து வாங்கி விட்டதாக அவர் கூறினார். மேலும் தன்னுடைய படத்தை பதிவேற்றி இவர்தான் அடுத்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் என்றும் அவர் ஒரு ட்விட்டர் பதிவை இணைத்துள்ளார்.

IPL 2022: Chahal announces himself as RR captain after hacking team's  Twitter account | Cricket News | Zee News

மேலும் அதோடு நில்லாமல் மற்றொரு பதிவில் சமீபத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இவர் பேட்டிங் விளையாடியபோது எடுக்கப்பட்ட படத்தை பதிவேற்றியுள்ளார். அந்தப் பதிவில் இதற்கு 10000 ரீ-ட்வீட்கள் வந்தாள் பட்லர் உடன் இணைந்து நான் துவக்க வீரராக விளையாட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். புதிய அணியில் இணைந்த உடனேயே மிகவும் அந்த அணி ரசிகர்களுக்கு நெருக்கமாக சஹால் மாறிவிட்டார் என்று ஐபிஎல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.