15ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஜேசன் ராய், ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, அவருக்கு பதிலாக ரெய்னா சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. சென்னை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, வரும் ஐ.பி.எல் போட்களில் புதிய அவதாரம் ஒன்றை எடுக்க உள்ளார். 15-ஆவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா வரும் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தில் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரெய்னாவை தக்கவைக்கவில்லை. இந்த சூழலில் குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த ஜேசன் ராய், ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, அவருக்கு பதிலாக ரெய்னா சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரெய்னாவை தேர்வு செய்யாமல் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவரை அந்த அணி தேர்வு செய்தது. இதனால் ரெய்னா ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெய்னாவுக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை உணர்ந்த ஸ்டார் நிறுவனம் அவரை வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்ய பெரும் தொகையை வழங்க முன்வந்தது. இதேவேளை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் உள்ளார். உதவி பயிற்சியாளர்களாக பிரவீன் ஆம்ரே, அஜித் அகர்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக ஜேம்ஸ் ஹோப்ஸ் (அவுஸ்திரேலியா) ஆகியோர் இருக்கின்றனர்.
இந்த நிலையில் மேலும் ஒரு உதவி பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் நேற்று நியமிக்கப்பட்டார். 40 வயதான வாட்சன் ஆஸ்திரேலிய அணிக்காக 59 டெஸ்ட், 190 ஒருநாள், 58 இருபது ஓவர் போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர். சிஎஸ்கே அணிக்காவும் இவர் விளையாடியுள்ளார்.