வீடியோ பாத்துட்டு இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு சொல்லுங்க.. 4,4,4,6,6,6 என ஒவ்வொரு பந்தையும் விரட்டியடித்த இலங்கை வீரர் குட்டி சனத் பானுகா – மிஸ் பண்ணாம வீடியோ பாருங்க

Cricket

9 பந்துகளில் 31 ஓட்டங்களை குவித்த பானுக ராஜபக்ஷ

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி படுதோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 137 ரன்களுக்கு சுருண்டு போனது. 15வது ஐபிஎல் தொடரின் 8வது போட்டியில் மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் கேப்டனான மாயன்க் அகர்வால் 1 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான தவான் 16 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய பனுகா ராஜபக்சே 31 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்கவில்லை.

கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறிய போதிலும், கடைசி நேரத்தில் பந்துவீச்சாளரான ரபாடா 4 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 25 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.2 ஓவரில் 137 ரன்கள் எடுத்த பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் டிம் சவுதி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிவம் மாவியின் பந்துவீச்சில் பனுகா ராஜபக்சே ஹெட்ரிக் சிக்சர்களை விளாசிய பின்னர் அடுத்த பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Leave a Reply

Your email address will not be published.