என்னடா இது 5 தடவ சாம்பியன் ரோஹிட்டுக்கு வந்த சோதன.. வரிசையாக தோல்விகளை குவிக்கும் மும்பை. ப்ளேஓப் சுற்றுக்கு வாய்ப்பே இல்லையாம் !!

Cricket

அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த மும்பை இந்தியன்ஸ்

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் 9ஆவது லீக் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 15வது ஐபிஎல் தொடரின் 9வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 100 ரன்களும், ஹெய்ட்மர் 35 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரரான இஷான் கிஷன் 54 ரன்களும், இளம் வீரரான திலக் வர்மா 61 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் பெரிதாக ரன் குவிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக சாஹல் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த தோல்வியின் மூலம் 5 தடவைகள் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 2022 ஐ.பி.எல் தொடரில் அடுத்தடுத்து முதல் இரு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. மும்பை அணி ப்ளேஓப் சுற்றுக்கே செல்லாது எனவும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.