7ஆம் அறிவு படைத்த ரவி சாஸ்திரி… ஜோஸ் பட்லரின் சதத்தில் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவம் !

Cricket

இந்திய அணியின் முன்னாள் கோச் ரவி சாஸ்திரி சொன்னது போல் நடத்தது.

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 9ஆவது லீக் போட்டியில் நேற்று மாலை ஐந்து முறை சம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர், மும்பை அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 68 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். ஐ.பி.எல் தொடரில் அவரின் இரண்டாவது சதமாக இது அமைந்தது. அது மாத்திரமல்லாமல் 2022 ஐ.பி.எல் தொடரில் பதிவு செய்யப்பட்ட முதல் சதமாகவும் இது அமைந்தது. ரவி சாஸ்திரி சொன்னதுபோல் ஜாஸ் பட்லர் சதம் அ டித்து அசத்தியுள்ளார்.

ரவி சாஸ்திரி பேட்டி, இப்போட்டி ஆரம்பமாக முன்பு பேட்டிகொடுத்திருந்த இந்திய அணி முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ‘பட்லரை 6ஆவது ஓவருக்குள் வீழ்த்திவிட வேண்டும். இதற்கு பும்ராவை பயன்படுத்த வேண்டும். ஒருவேளை வீழ்த்தவில்லை என்றால், நிச்சயம் பெரிய ஸ்கோர் அ டிப்பார்’ எனக் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.