ஐ.பி.எல் வரலாற்றில் சதம் விளாசிய இங்கிலாந்து வீரர்கள் லிஸ்ட் இதோ

Cricket

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 68 பந்தில் 100 ரன்களை குவித்தார் பட்லர். இது ஐபிஎல்லில் அவரது 2வது சதம். அவரது சதத்தால் 20 ஓவரில் 193 ரன்களை குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை அணியை 170 ரன்களுக்கு சுருட்டி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ஐபிஎல்லில் 2வது சதத்தை பதிவு செய்த நிலையில், ஐபிஎல்லில் சதமடித்த இங்கிலாந்து வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

1. கெவின் பீட்டர்சன் (103)
2012 ஐபிஎல்லில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடிய கெவின் பீட்டர்சன், டெக்கான் சார்ஜர்ஸுக்கு எதிராக அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 103 ரன்கள் அ டித்து அவுட்டே ஆகாமல் இன்னிங்ஸை முடித்தார்.

2. பென் ஸ்டோக்ஸ் (103)
2017 ஐபிஎல்லில் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஆடிய பென் ஸ்டோக்ஸ், குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்தார். 103 ரன்களுடன் ஸ்டோக்ஸும் ஆட்டமிழக்கவில்லை.

3. ஜானி பேர்ஸ்டோ (114)
2019 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணியில் ஆடிய ஜானி பேர்ஸ்டோ, ஆர்சிபிக்கு எதிராக 114 ரன்களை குவித்தார்.

4. பென் ஸ்டோக்ஸ் (107)
2020 ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடியபோது மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 107 ரன்களை குவித்தார் ஸ்டோக்ஸ். அது ஸ்டோக்ஸுக்கு 2வது சதம் ஆகும்.

5. ஜோஸ் பட்லர் (124)
2021 ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய ஜோஸ் பட்லர் சன்ரைசர்ஸுக்கு எதிராக 124 ரன்களை குவித்தார்.

6. ஜோஸ் பட்லர் (100)
2022 ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸூக்கு எதிரான போட்டியில் 100 ரன்கள் அ டித்தார்.

Leave a Reply

Your email address will not be published.