கோலி என்னங்க பெரிய கேப்டன்… டெஸ்ட்டில் விராட் கோலியை விட சிறந்த கேப்டன் இவர் தான் – வாசிம் ஜாபர் ஓபன் டாக் !!

Cricket

முன்னாள் கேப்டன் விராட் கோலியை விட ரோஹித் சர்மா மிக சிறந்த கேப்டனாக திகழ்வார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டியிலும் வெறும் மூன்றே நாளில் போட்டியை முடித்து 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.

இந்திய அணியின் மிரட்டல் வெற்றியில் ஸ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட், பும்ராஹ் போன்ற வீரர்கள் மிகப்பெரும் பங்காற்றினர். இந்திய அணியின் இந்த வெற்றியை பாராட்டும் முன்னாள் வீரர்கள் பலர், இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களையும் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர். அந்தவகையில், நடந்து முடிந்த இந்தியா இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியையும் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து வாசிம் ஜாபர் பேசுகையில், ‘டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியை விட ரோகித் சர்மா மிகச்சிறந்த கேப்டனாக வர முடியும். போட்டிகளின் முடிவுகளை பார்த்தாலே தெரிகிறது, சரியான நபர் கையில்தான் கேப்டன் பதவி சென்றுள்ளது. ரோகித் சர்மா சிறப்பாக யுத்திகளை கையாள்கிறார். இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக ரோகித் சர்மா திகழ்கிறார். இன்னும் எத்தனை டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தலைமை தாங்குவார் என தெரியாது. தொடர்ந்து சொந்த மண்ணில் விளையாட உள்ளோம். இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது கடினமாக இருக்காது’ என்று தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published.