சச்சின் 24 ஆண்டு பெட்டியில் அடைத்து பாதுகாத்த சாதனையை பிறந்த நாளில் சவப் பெட்டியில் அடைத்த நியூசிலாந்து கேப்டன் லதாம் !

Cricket

2022ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றுவரும் நிலையில் மறுபக்கம் ஒருநாள் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. பாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டிகள் நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. கேப்டன் டாம் லாதம் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அடுத்து ஆடிய நெதர்லாந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 118 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்நிலையில் நேற்று நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதமின் பிறந்தநாள் ஆகும். நேற்று அவர் அ டித்த 140 ரன்கள் மூலம் ஒருநாள் போட்டியில் பிறந்தநாள் அன்று அதிக ரன்கள் அ டித்தவர் என்ற புதிய சாதனையை டாம் லாதம் படைத்துள்ளார்.

இதன்மூலம் சச்சினின் 24 ஆண்டு கால சாதனையை டாம் லாதம் முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 1998ம் ஆண்டு தனது பிறந்தநாளில் 134 ரன்கள் அ டித்ததே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.