‘ஹோல்டர் அணிக்குள் வந்தது அணிக்கு மேலும் வலுசேர்த்துள்ளது’ – இலங்கை ஸ்டார் பவுலர் சமீரவுக்கு இனி வாய்ப்பு இல்லையன்பதை மறைமுகமாக கூறிய கேப்டன் ராகுல்

Cricket

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான வெற்றி குறித்து போட்டி நிறைவுக்கு பின்னர் லக்னோ கேப்டன் கே.எல். ராகுல் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, ‘மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், நிலைத்து நின்று ஆடவும், வெற்றி பெறுவதற்கு நல்ல வாய்ப்பை உருவாக்கவும் நாங்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளோம். இன்று (நேற்று) மீண்டும் அதைச் செய்தோம்.

இது போன்ற விளையாட்டுக்களில் வெற்றி பெறுவது மிகுந்த நம்பிக்கையைத் தரும். ஆக்ரோஷமான, ஆனால் ஆபத்து இல்லாத கிரிக்கெட்டை விளையாடி எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடிக்க வேண்டும், ஆனால் ஸ்மார்ட் ஷாட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆல்-ரவுண்டர் ஹோல்டரின் சேர்க்கை அணிக்கு வலு சேர்த்துள்ளது. கடந்த 3-4 சீசன்களாக நான் ஹூடாவுடன் விளையாடி வருகிறேன். அவர் தனது வாய்ப்பிற்காக காத்திருக்க வேண்டியிருந்தது.

அவர் அதைப் சிறப்பாக பயன்படுத்துகிறார், இப்போது மிடில் ஆர்டரில் நம்பக்கூடிய ஒருவராக அவர் மாறியிருக்கிறார். இவ்வாறு கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரான துஸ்மந்த சமீரவின் இடத்துக்காகவே மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் ஹோல்டர் இடம்பெற்றார். இதன் மூலம் அடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஹோல்டக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் வேளையில் துஸ்மந்த சமீரவுக்கு வாய்ப்பு கிடைக்காது என்பது தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.