என்னடா இது பஸ் டிரைவராக மாறிய தல டோனிக்கு வந்த சோதன.. ஏப்ரல் 20-க்கு முன்னர் நீக்க உத்தரவு

Cricket

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல் தொடரானது கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி தொடங்கிய 15-வது ஐ.பி.எல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்காக சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனி விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். அதில், தோன் பஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அந்த விளம்பரத்தில் சாலையில் திடீரென பேருந்தை சாலையில் நிறுத்திவிட்டு டோனி ஐபிஎல் தொடரை பார்ப்பது போன்று காட்சிகள் எடுக்கப்பட்டு இருந்தது.

இதனால் ஏற்பட்ட சாலை நெரிசலின் போதும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ஐபிஎல் போட்டியை காண்பது போன்று எடுக்கப்பட்டு இருந்தது. இந்த விளம்பரத்தை தடைசெய்ய கோரி சாலை பாதுகாப்பு சங்கம் சார்பில் மத்திய விளம்பர ஒளிபரப்பு ஆணையத்தில் வ ழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில், சாலை விதிமீறல், சாலை நெரிசல் ஆகியவற்றை டோனியின் விளம்பரம் ஊக்குவிப்பது போன்று உள்ளதாக குற் றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த மத்திய விளம்பர ஒளிபரப்பு துறை, குற்றச்சாட்டு நிரூபனமானதால், சம்மந்தபட்ட விளம்பரத்தை மாற்றி அமைக்க வேண்டும். அல்லது, அனைத்து சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் இருந்தும் வரும் ஏப்ரல் 20ம் தேதிக்குள் நீக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.