திடீரென்று 15வது மாடியில் இருந்து சஹாலை தூக்கி வீச முயன்ற மும்பை அணி வீரர். ப யத்தில் ம யங்கி விழுந்த சஹால் – வெளியான பரபரப்பு தகவல்

Cricket

ராஜஸ்தான் அணி வீரரை சஹாலை பயமுறுதத்திய மும்பை வீரர்…

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. கடந்த வருடம் வரை பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த யுஸ்வேந்திர சாஹல் இந்த வருடம் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 3 போட்டியில் சாஹல் 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது 2013 ஆம் ஆண்டு தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது நடந்த அ திர்ச்சி சம்பவம் குறித்து பர பரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் நடந்த உரையாடலை ராஜஸ்தான் அணி வெளியிட்டுள்ளது. அதில் பேசிய யுஸ்வேந்திர சாஹல் கூறுகையில், ‘2013 ஆம் ஆண்டு நான் மும்பை அணியில் நான் இருந்த போது பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்திற்காக அங்கு இருந்த விடுதியில் நாங்கள் தங்கி இருந்தோம். அப்போது அணியின் சக வீரர் ஒருவர் என்னை திடீரென்று அவர் தூக்கி கொண்டு 15வது மாடி பால்கனியிலிருந்து தொங்க விட்டார். நான் அ திர்ச்சியில் உ றைந்தேன். என்னை காப்பாற்றுங்கள் என்று கத்தினேன்.

அந்த வீரரின் கழுத்தை நன்கு பி டித்து கொண்டேன். அப்போது அங்கிருந்த சக வீரர்கள் என்னை காப்பாற்றினார்கள். நான் ப யத்தில் ம யங்கிவிட்டேன். பிறகு தண்ணீர் முகத்தில் தெளித்த பிறகு தான் நினைவு திரும்பியது. அன்று சிறு தவறு நடந்து இருந்தாலும் நான் 15வது மாடியிலிருந்து கீழே விழுந்திருப்பேன். இந்த காரியத்தை செய்த வீரரின் பெயரை வெளியிட விரும்பவில்லை’ என அவர் தெரிவித்தார்.

சாஹலின் இந்த பர ப்பரப்பு தகவலால் கிரிக்கெட் ரசிகர்கள் அ திர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சஹாலிடம் இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பி.சி.சி.ஐ முழுமையாக விசாரணை நடத்தி அந்தக் குறிப்பிட்ட வீரருக்கு தண்டனை வழங்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.