அப்படியோ கோலியின் வெறித்தனம் இந்த பையன் கிட்ட இருக்கு. இந்திய அணிக்கு கிடைத்த சொத்து – வைரலாகும் வீடியோ

Cricket

கோலியின் பினிஷிங் ஸ்டைலில் பதோனி…

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதும் லக்னோ அணியின் இளம் வீரர் ஆயுஸ் பதோனி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி போல் வெற்றியை கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ரிஷ்ப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை டெல்லி அணி எடுத்தது.

லக்னோ அணியைப் பொறுத்தவரை ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளும், கிருஷ்ணப்பா கௌதம் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த லக்னோ அணி, 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் டி காக் 80 ரன்கள் எடுத்தார். அதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் இப்போட்டியில் லக்னோ அணியின் இளம் வீரர் ஆயுஷ் படோனி, விராட் கோலி கொண்டாடியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த போட்டியில் கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் லக்னோ அணி இருந்தது. அப்போது களமிறங்கிய ஆயுஷ் படோனி, ஒரு சிக்சர், பவுண்டரி விளாசி அணியை வெற்றிபெற வைத்தார். இதனை அடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி போல் முதுகில் தட்டி ஆக்ரோசமாக வெற்றியைக் கொண்டாடினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.