2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பவர் ஆயுஷ் பதோனி. குஜராத் லயன்ஸ் அணிகாக விளையாடும் அவர், கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார். இக்கட்டான கட்டத்தில் களமிறங்கினாலும், பயமில்லாமல் பந்து எதிர்கொண்டு எல்லைக்கோட்டுக்கு அடிக்கும் அவரின் சாமார்த்தியம், கிரிக்கெட் நிபுணர்களையும் கவனிக்க வைத்துள்ளது. இதுவரை லக்னோ அணிக்காக 4 போட்டிகளில் விளையாடியுள்ள பதோனி, 3 போட்டிகளில் லக்னோ அணிக்காக வெற்றி ரன்களை அடித்து சிறந்த பினிஷர் என அந்தஸ்தையும் பெற்றுள்ளார்.
4 போட்டிகளில் 102 ரன்களை விளாசி, ஸ்டைக்ரேட் 156 வைத்துள்ளார். இதில் இரண்டு போட்டிகளில் நாட் அவுட்டாக மேட்சை முடித்தார். இந்த முறை வாய்ப்பு கிடைத்தது பற்றி அயுஷ் பதோனி பேசும்போது, கடந்த ஐபிஎல் போட்டியில் எந்த அணியும் தன்னை ஏலம் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார். ஆனால், இந்த முறை ஐபிஎல் விளையாடுவதற்கு கவுதம் காம்பீர் காரணம் எனத் தெரிவித்துள்ள அவர், தன்னுடைய திறமையை காம்பீர் அடையாளம் கண்டது பெருமையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இக்கட்டான சூழலில் அசால்டாக சிக்சர் அ டிப்பது ஆயுஷ் பதோனியின் ஸ்பெஷல். அதுவே அவருடைய திறமையை விரைவாக கிரிக்கெட் உலகுக்கு அடையாளபடுத்தியுள்ளது. இந்திய அணிக்கான அடுத்த பினிஷர் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் நெட்டிசன்கள் பதோனியை புகழத் தொடங்கியுள்ளனர்.