‘அப்படி தான் மீண்டும் செய்வார் என கணித்தேன்’ – இரு சிக்ஸர்களை விளாசிய புதிய பினிஷர் திவாட்டியா ஓபன் டாக்

Cricket

2022 ஐ.பி.எல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 189 ரன்கள் குவித்தது. 190 என்ற இமாலய இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்மன் கில்லின் 96 ரன்கள் உதவியுடன் வெற்றி இலக்கை வெகுவாக நெருங்கியது. எனினும், 19வது ஓவரில் அவர் அவுட் ஆக ஆட்டத்தில் திடீர் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதனால் கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது. ராஜஸ்தான் அணிக்காக விளையாட்டின்போது இதற்கு முன் கடைசி ஓவர்களில் சிக்ஸர்கள் விளாசி அணியை வெற்றிபெறவைத்து அதன்மூலமாக ஐபிஎல்லில் ஸ்டாராக உயர்ந்தவர் ராகுல் தெவாட்டியா.

இதனால் இந்த முறையும் அந்த மேஜிக் நிகழுமா என்ற எதிர்பார்ப்பு உருவானது. அதற்கேற்ப, 5வது பந்தில் சிக்ஸர் அடித்து அனைவரையும் சீட்டின் நுனிக்கு கொண்டு வந்த தெவாட்டியா, கடைசி பந்தையும் சிக்ஸ் அடித்து மீண்டும் அந்த மேஜிக்கை நிகழ்த்திக் காட்டினார். இவரின் உதவியால் குஜராத் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. வெற்றிக்கு பிறகு பேசிய ராகுல் தெவாட்டியா, ‘கடைசி நேரத்தில் யோசிக்க முடியவில்லை.

ஆனால், சிக்ஸர்கள் அ டிக்க வேண்டும் என்று நானும் டேவிட் மில்லரும் பேசிக் கொண்டோம். அந்த பிளானுக்கு ஏற்பவே விளையாடினேன். கடைசி பந்து பேட்டின் நடுவில்பட்டது. பட்டதுமே தெரிந்துவிட்டது அது சிக்ஸ்தான் என்பது. கடைசி பந்து எப்படி வரும் என்பதை முன்கூட்டியே பிளான் செய்தேன். எப்படி என்றால், ஓடியன் ஸ்மித் எனக்கு வீசிய முதல் பந்தை ஆஃப் சைடில் வொயிட் போல் வீசினார். அப்படி தான் மீண்டும் செய்வார் என கணித்தேன். அதற்கேற்ப நகர்ந்து ஆடி சிக்ஸ் அடித்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.