‘சஹாலை மாடியில் இருந்து தூக்கி வீச முயன்ற மும்பை இந்தியன்ஸ் வீரர் யார் என்பது தெரிய வேண்டும்’ – சேவாக் ஆவேசம்

Cricket

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் தனது புதிய அணியான ராஜஸ்தானில் சிறப்பாக விளையாடி வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இதுவரை நடந்த போட்டிகளில் முக்கிய கட்டங்களில் நேர்த்தியாக பந்து வீசி, விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சாஹல் தனது சிறப்பான ஆட்டத்தை தொடருவார் என்று நம்புகிறார். மைதானத்திற்கு வெளியேவும் சாஹல் மிகவும் சுட்டித்தனமான, அனைவராலும் விரும்ப பட கூடிய வீரராகவும் இருந்து வருகிறார். அவருடைய எளிதாக அணுகுமுறைக்கு அனைரையும் ரசிக்க வைக்கிறது.

இருப்பினும், 2013-ல் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாடியபோது, ஒரு வீரர் கு டிபோ தையில் இருந்தபோது சாஹல் ஒரு விரும்பத்தகாத சம்பவத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில், கருண் நாயர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருடன் சாஹல் ‘கம்பாக் ஸ்டோரிஸ்’ என்ற தலைப்பில் பேசினார். அதில் சாஹல் ஒரு சம்பவத்தைப் பற்றித் பேசி, இது பலருக்குத் தெரியாது என்றும் கூறினார்.

2013 ஆம் ஆண்டில் கு டிபோ தையில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஒருவர், தன்னை பால்கனியில் தொங்கவிட்டார் எனவும், அதிஷ்டவசமாக நான் உயிர் தப்பினேன் என்றும், அவரின் பெயரை கூற விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று கூறியுள்ளார் அதன்படி அதில்., கு டிபோ தையில், சாஹலிடம் அவ்வாறு நடந்து கொண்டது யார் என்பது தெரிவது மிகவும் முக்கியம். அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் இதனை வேடிக்கையாக கருதமுடியாது.

மேலும் அந்த வீரர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அறியவேண்டியது உள்ளது என்று பதிவிட்டுள்ளார். இதற்கிடையில் ஷேவாக் வெள்ளிக்கிழமை மாலை 4.42 மணிக்கு இந்த ட்விட்டை பதிவு செய்திருந்தார். ஆனால் ட்விட் செய்த சில மணி நேரம் கழித்து அவர் அந்த பதிவை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.