‘கிரிக்கெட் உலகில் இந்தியா ஆள வேண்டும் என விரும்பினால் இந்த வீரரை கேப்டனாக்க வேண்டும். வயது காரணமாக ரோஹிட்டால் நீண்ட நாட்களுக்கு கேப்டனாக இருக்க முடியாது’ – பாக். வீரர் அக்தார்

Cricket

தற்போது இந்திய அணிக்கு தலைமை வகிக்கும் ரோகித் சர்மாவுக்கு பிறகு அடுத்த இந்திய அணியின் கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. கே.எல். ராகுல், ரிஷப் பன்ட், பும்ரா உள்ளிட்ட இளம் வீரர்கள் அடுத்த கேப்டன் ரேஸில் உள்ளனர். ஆனால், இந்த ரேஸில் புதிதாக ஒருவரின் பெயரை பரிந்துரைத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். இது குறித்து அவர் பேசும்போது ஸ்ரேயாஸ் அய்யரை இந்திய அணியின் கேப்டனாக நியமித்தால், இந்திய அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரேயாஸ் அய்யர் குறித்து பேசிய அக்தர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அவர் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். சரியான நேரத்தில் அவர் எடுக்கும் முடிவுகள், அணியை வழி நடத்தும் விதம் சிறந்த தலைமைப் பண்புகள் வெளிப்படையாக தெரிவதாக அக்தர் கூறியுள்ளார். ஸ்ரேயாஸ் இந்திய அணியின் கேப்டனாக ஆவதற்கான அனைத்து தகுதிகளும் இருப்பதாக தெரிவித்த அவர், கேப்டனாக ஒவ்வொரு போட்டியிலும் தன்னை நிரூபித்து வருவதாகவும் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

அஜிங்கியா ரஹானே குறித்து பேசிய சோயிப் அக்தர், அவருக்கு கொல்கத்தா அணிகள் நிறைய வாய்ப்புகள் கொடுத்து வருவதாக கூறினார். அவர் திறமையான பிளேயர் என்பதால், இந்த வாய்ப்புகளை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், நழுவ விட்டுவிடக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். தற்போதைய இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். 3 வடிவிலான இந்திய அணிக்கும் ரோகித் கேப்டனாக இருந்தாலும், வயது காரணமாக அவரால் நீண்ட நாட்களுக்கு கேப்டனாக இருக்க முடியாது.

தற்போது ரோகித் சர்மாவுக்கு 34 வயதாகிறது. அடுத்த 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கு பிறகு மூன்று வடிவிலான இந்திய அணிக்கும் புதிய கேப்டன் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அந்த ரேஸில் முந்தப்போவது யார்? என்பது இன்னும் ஓராண்டுக்குள் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published.