‘நான் ஐ.பி.எல் ஆடாவிட்டாலும் என்னுடைய ஆதரவு இந்த அணிக்கு தான்’ – அதிரடி வீரர் கெய்ல் ஓபன் டாக்

Cricket

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் இதுவரை 463 டி20 போட்டிகளில் விளையாடி 22 சதங்கள் மற்றும் 88 அரை சதங்கள் உட்பட 14 ஆயிரத்து 562 ரன்கள் குவித்துள்ளார். டி20 போட்டிகளில் இவருடைய பேட்டிங் எவெரேஜ் 36.22 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 144.75 ஆகும். ஐபிஎல் தொடரில் 2009 முதல் கடந்த ஆண்டு வரை விளையாடிய இவர் 141 இன்னிங்ஸ்களில் 6 சதம் மற்றும் 31 அரைசதம் உட்பட மொத்தமாக 4965 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் எவெரேஜ் 39.722 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 148.96 ஆகும்.

2009 மற்றும் 2010 ஆம் ஆண்டில் கொல்கத்தா அணியில் விளையாடினார். பின்னர் 2011 முதல் 2017ஆம் ஆண்டு வரையில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இவர் விளையாடினார். 2018 முதல் கடந்த ஆண்டு வரை பஞ்சாப் அணியின் இவர் விளையாடியது குறிப்பிடத்தக்கது. 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் தனிப்பட்ட நபராக அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப்பை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் தவிர்க்கமுடியாத பேட்ஸ்மேனாக அடையாளம் கொள்ளப்படும் கிறிஸ் கெயில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட போவதில்லை.

பஞ்சாப் அணி அவரை தக்கவைக்கவில்லை என்றாலும், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மெகா ஏலத்தில் கிறிஸ் கெயில் பங்கேற்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் மெகா ஏலத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்யவில்லை. அவர் தனது பெயரை பதிவு செய்திருந்தால் நிச்சயமாக ஏதேனும் ஒரு அணி அவரை வாங்கி இருக்கும். 2009ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை தொடர்ச்சியாக 13 வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த அவர் இந்த ஆண்டு முதல்முறையாக விளையாட போவதில்லை என்கிற செய்தி ரசிகர்கள் அனைவரையும் வே தனை அடையச் செய்துள்ளது.

அண்மையில் நடந்த ஒரு உரையாடலில் இவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நீங்கள் விளையாடவில்லை என்றாலும் உங்களுடைய ஆதரவு எந்த அணிக்கும் இருக்கும் என்ற கேள்வி இவரிடம் முன்னெடுத்து வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ‘என்னுடைய ஆதரவு இரண்டு அணிகளுக்கு இருக்கும். அந்த இரண்டு அணிகளில் ஒரு அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்றும் மற்றொரு அணி பஞ்சாப் கிங்ஸ்’ என்றும் கூறியுள்ளார்.

பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் விளையாடி இருக்கிறார். முன்பு தான் விளையாடிய அணிகளுக்கு தன்னுடைய ஆதரவு எப்போதும் இருக்கும் என்று அவர் கூறியுள்ளது பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணி ரசிகர்களை நெகழ்ச்சியடையச் செய்துள்ளது. அவர் அவ்வாறு பேசிய அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மூலமாக அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.