கார்த்திக்கை ஒரு சிறந்த ஃபினிஷராக பார்க்கிறோம். டி20 உலகக்கிண்ண அணியில் இடம்பெறும் முழு தகுதியும் அவருக்கு உள்ளது. – ரவி சாஸ்திரி

Cricket

2022ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை ஆர்சிபி அணியின் ஃபினிஷர் பாத்திரத்தில் சிறப்பாக விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக். இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆஸி. வில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை 2022க்கான இந்திய அணியில் இடம் பெற, தினேஷ் தகுதியானவர் என்று கருத்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாடும் அளவு தகுதியுடனும் கா யங்கள் இல்லாமல் இருந்தால் இந்த ஆண்டு டி-20 உலகக் கோப்பையில் தினேஷுக்கு முக்கிய இடம் இருக்கும்.

மேலும் அவருக்கு ஒரு வேகப்பந்து வீச்சு இருந்தால். நிச்சயமாக அவர் சிறந்த தெரிவாக இருப்பார்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் சாஸ்திரி கூறினார். அவருக்கு அனுபவம் இருக்கிறது, எல்லா ஷாட்களையும் அவர் பெற்றுள்ளார். இப்போது தோனி இல்லை, எனவே அவரை ஒரு சிறந்த ஃபினிஷராக பார்க்கிறோம். ஆனால் எத்தனை கீப்பர்கள் வேண்டும் என்பதையும் பார்க்க வேண்டும், தற்போது இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பந்த் இருக்கிறார். அவர்களில் யாராவது ஒருவருக்கு கா யம் ஏற்பட்டால், தினேஷ் தானாகவே உள்ளே வந்துவிடுவார், ‘என்று சாஸ்திரி மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை 2021 இன் போது போட்டி வர்ணனையாளராக அவதாரம் எடுத்த கார்த்திக், ஐபிஎல் 2022 இல் ஆர்சிபிக்காக பேட்டிங் மூலம் பரபரப்பானவர். கார்த்திக் இதுவரை தனது அணிக்காக மூன்று போட்டிகளில் 90 ரன்கள் எடுத்துள்ளார் அதில் அவர் இரண்டு முறை ஆட்டமிழக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 36 வயதான தினேஷ் கார்த்திக், 2019 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடியது தான் கடைசியாகும். அந்தத் தொடரில் இந்தியா அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிராக தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது. அதன்பிறகு, தினேஷ் கார்த்திக்குக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published.