சி.எஸ்.கே அணியில் விளையாடிய இலங்கை வீரர்கள்… ஒரு இலங்கை தமிழரும் விளையாடியுள்ளார்

Cricket

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பிஎல் தொடர் ஆட்டத்தில் 2013-க்குப் பிறகு ஓர் இலங்கை வீரர் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றார். சிஎஸ்கே அணியில் பிரிடோரியஸுக்குப் பதிலாக இலங்கைச் சுழற்பந்துவீச்சாளர் மகீஷ் தீக்ஷனா அறிமுகமானார்.

ஐபிஎல் Mega ஏலத்தில் இலங்கை வீரர் மஹீஸ் தீக்ஷனாவை ரூ. 70 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் 2013-க்குப் பிறகு விளையாடும் இலங்கை வீரர், மஹீஷ் தீக்ஷனா. 2012-ல் கடைசியாக நுவன் குலசேகரா விளையாடும் 11 பேரில் ஒருவராக இடம்பெற்றார். 2013-ம் ஆண்டு குலசேகராவும் தனஞ்ஜெயாவும் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றாலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு இப்போதுதான் ஓர் இலங்கை வீரர் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளார்.

21 வயது தீக்ஷினா, இலங்கை அணிக்காக இதுவரை 4 ஒருநாள், 15 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சிஎஸ்கே அணியில் இதற்கு முன்பு முத்தையா முரளிதரன், சாமர கபுகடரா, திலன் துஷாரா, திசாரா பெரேரா, சுராஜ் ரந்தீவ், அகிலா தனஞ்ஜெயா, நுவான் குலசேகரா ஆகிய இலங்கை வீரர்கள் விளையாடியுள்ளார்கள். இவ்வாறான நிலையில் லசித் மாலிங்கவை போன்று பந்துவீசும் மதீஷ பத்திரனவும் சி.எஸ்.கே அணியில் அறிமுகமானார்.

சிஎஸ்கே அணியில் இலங்கை வீரர்கள்

கபுகடரா (2008)
முரளிதரன் (2008, 2009, 2010)
திலன் துஷாரா (2009, 2010)
திசாரா பெரேரா (2010)
குலசேகரா (2011, 2012, 2013)
சூரஜ் ரந்தீவ் (2011, 2012)
அகிலா தனஞ்ஜெயா (2013)
மஹீஷ் தீக்ஷனா (2022)

மதீஷ பத்திரன (2022)

Leave a Reply

Your email address will not be published.