‘டோனி தயவு செஞ்சு நீங்க சும்மா இருக்க, ஜடேஜாவே எல்லாத்தையும் பாத்துப்பாரு’ – தொடர் தோல்விகளின் பின் சி.எஸ்.கே நிர்வாகம் அதிரடி

Uncategorized

2022ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. சிஎஸ்கே அணியில் முன்னாள் கேப்டன் மற்றும் சீனியர் வீரர் என்ற முறையில் தோனியின் தலையீடும் வழிநடத்தலும் அதிகமாக இருந்த நிலையில், இனி ஜடேஜாவே அணியை முழுவதுமாக வழிநடத்தடும் என்று அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டு சிஎஸ்கே அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தி 4 முறை சிஎஸ்கேவிற்கு கோப்பையை வென்று கொடுத்த தோனி, 15வது சீசனுக்கு முன்பாக கேப்டன்சியிலிருந்து விலகினார்.

இதையடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். இந்த சீசனில் ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி ஆடிவருகிறது. ஜடேஜாவின் கேப்டன்சியில் இந்த சீசன் சிஎஸ்கே அணிக்கு படுமோசமாக தொடங்கியுள்ளது. முதல் 4 போட்டிகளிலுமே தோல்வியடைந்தது சிஎஸ்கே. கேகேஆரிடம் தோற்ற சிஎஸ்கே அணி, லக்னோ அணிக்கு எதிராக 210 ரன்கள் அ டித்தும், அந்த ஸ்கோருக்குள் லக்னோ அணியை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை தழுவியது.

பஞ்சாப் கிங்ஸூக்கு எதிரான போட்டியில் 181 ரன்கள் என்ற இலக்கை விரட்டமுடியாமல் 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி. சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தோனி கேப்டன்சியிலிருந்து விலகினாலும், சிஎஸ்கே அணியை பொறுத்தமட்டில் முக்கியமான முடிவுகளை அவர் எடுப்பார் என்பதும், களத்தில் இக்கட்டான, நெருக்கடியான சூழல்களில் கேப்டன் ஜடேஜாவிற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார் என்பதும் தெரிந்த விஷயம் தான்.

ஆனால் அதை மிகவும் நெருக்கடியான அல்லது தேவைப்படும் நேரங்களில் மட்டும் செய்தால் நல்லது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஃபீல்டிங் செட்டப் செய்தார். வீரர்களுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கி வழிநடத்தினார். ஜடேஜாவோ பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார். அணியின் கேப்டன் பவுண்டரி லைனில் நின்றுகொண்டு அணியை கண்டிப்பாக வழிநடத்தவோ கட்டுப்படுத்தவோ முடியாது.

பெயரளவில் ஜடேஜா கேப்டனாக இருந்தாலும் செயலளவில் தோனியே கேப்டனாக செயல்பட்டது விமர்சனத்துக்குள்ளானது. அஜய் ஜடேஜா, ஹர்பஜன் சிங் ஆகிய முன்னாள் வீரர்கள் அதை சுட்டிக்காட்டி பேசியும் இருந்தனர். இரட்டை தலைமை எந்த துறையில் இருந்தாலும் பெரிய பிரச்னை தான். அது அரசியலோ அல்லது விளையாட்டோ, எந்த துறையிலும் இரட்டை தலைமை சரிப்பட்டுவராது. எனவே இதுதொடர்பான திடமான முடிவெடுக்க சிஎஸ்கே அணி நிர்வாக கூட்டம் நடந்துள்ளது.

இன்று சிஎஸ்கே அணி சன்ரைசர்ஸுக்கு எதிராக ஆடிய நிலையில், 2 நாட்களுக்கு முன் சிஎஸ்கே அணி மீட்டிங் நடந்துள்ளது. அந்த கூட்டத்தில், தோனியின் தலையீடோ குறுக்கீடோ இல்லாமல், சிஎஸ்கே அணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் ஒரு கேப்டனாக ஜடேஜாவே எடுக்கலாம் என்றும், களத்திலும் ஜடேஜாவின் முழுமையான வழிகாட்டுதலில் சிஎஸ்கே ஆடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இரட்டை தலைமையின் கீழ் தெளிவற்ற பார்வையுடனும் மனநிலையுடனும் ஆடாமல், கேப்டன் ஜடேஜா மீது நம்பிக்கை வைத்து, தோனியின் தலையீடு இல்லாமல் முழுக்க முழுக்க ஜடேஜாவின் வழிகாட்டுதலில் ஆடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டிக்கு முன்பாகவே எடுக்கப்பட்டிருந்தாலும், சன்ரைசர்ஸிடமும் சிஎஸ்கே அணி தோல்வியைத்தான் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இனிவரும் போட்டிகளில் சிஎஸ்கே அணி எப்படி ஆடுகிறது என்று பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published.